கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்துவந்த 1 லட்சம் பிசிஆர் கருவிகள்!

 

கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்துவந்த 1 லட்சம் பிசிஆர் கருவிகள்!

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்தன.

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தென்கொரிய நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தப்படி ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்ட 15 லட்சம் பிசிஆர் கருவிகள் முழுவதும் கடந்த வாரம் வந்தடைந்தன. இதனையடுத்து கூடுதலாக 10 லட்சம் கருவிகள் வாங்க புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டன.

கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்துவந்த 1 லட்சம் பிசிஆர் கருவிகள்!

7லட்சம் கருவிகளை தென் கொரியாவில் இருந்தும், ஜெர்மெனி மற்றும் அமெரிக்காவில் இருந்த தலா ஒரு லட்சம் கருவிகளையும், இந்தியாவிற்குள்ளேயே ஒரு லட்சம் கருவிகளையும் வாங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதற்கட்டமாக 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தற்போது தமிழக வந்தடைந்துள்ளன. அடுத்த 3 வாரங்களுக்குள் ஆர்டர் செய்யப்பட்ட மொத்த பிசிஆர் கருவிகளும் தமிழகம் வந்தடையும் என சுகாதரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.