சென்னை அருகே ஒரே தொழிற்சாலையை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா

 

சென்னை அருகே ஒரே தொழிற்சாலையை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது என்று சொல்லப்படும் சூழலில் தஞ்சாவூர் மாவட்ட அம்மாப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவிகள் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்9 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறூதி செய்யப்பட்டது.

சென்னை அருகே ஒரே தொழிற்சாலையை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா

ஒரே பள்ளியை சேர்ந்த 58 மாணவிகளுக்கு கொரோனா என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தஞ்சை மாவட்டத்தில் இதுவரைக்கும் 97 மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 439 பள்ளிகளிலும் படிக்கும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதுமே சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூரில் ஒரு தொழிற்சாலையில் 19 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

250 பேர் பணியாற்றி வரும் இந்த தொழிற்சாலையில் 19 பேருக்கு கொரொனா என்பதால் மற்ற தொழிலாளர்களிடையேயும் பீதி ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதித்த 19 பேரும் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிசை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.