‘யாரும்’என்று ரஜினி சொன்னது பா.ஜ.க.வையா?

 

‘யாரும்’என்று ரஜினி சொன்னது  பா.ஜ.க.வையா?

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு செய்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று ‘யாரும்’ இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.

‘யாரும்’என்று ரஜினி சொன்னது  பா.ஜ.க.வையா?

‘தலைவா வா’ என்று அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்துவிட்ட ரஜினியின் முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடத்திய ரசிகர்களுக்காகத்தான் இந்த அறிக்கை விட்டிருக்கிறார் ரஜினிகாந்த் என்று மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

உடல் பிரச்சனைக்கு ரஜினி அமெரிக்கா போகிறார் …. சிங்கப்பூர் போகிறார் என்றெல்லாம் பேச்சுவருகிறது. மன பிரச்சனைக்கும் அவர் ஓய்வை தேடுகிறார் என்றும் சொல்கிறார்கள். தேர்தல் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு அப்புறமாக அரசியலை தவிர தீவிர சினிமா பக்கம் திரும்பிவிடுவார் ரஜினி என்கிறார்கள்.

‘யாரும்’என்று ரஜினி சொன்னது  பா.ஜ.க.வையா?

ஆனால், ரஜினி இப்படி ஒரு முடிவினை எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்கிறார் தமாகா ஜி.கே.வாசன். கட்டி ஆரம்பிக்காவிட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு வாய்ஸ் கொடுங்கள் என்று சொல்லி வருகிறார்கள் பாஜகவினர். சென்னை வரும் ஜெ.பி.நட்டாவை ரஜினி சந்திப்பாரா? இல்லையா? என்ற பேச்சுக்கள் இருக்கின்றன.

ரஜினியின் ஆதரவு பாஜகவுக்கு தான் கிடைக்கும். ரஜினி ஆன்மீகத்தை நம்புகிறவர் என்பதால் அவரின் ஆதரவு பாஜகவிற்கு கிடைக்கும்
என பாஜக தமிழ் மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் பலரும் இதையே சொல்லி வருகிறார்கள்.

‘யாரும்’என்று ரஜினி சொன்னது  பா.ஜ.க.வையா?

காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், 1996ல் கொடுத்தது போல் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுக்க வேண்டும். அவருடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்கிறார். மக்கள் நீதி கமல்ஹாசனோ, தனக்கு ஆதரவு கேட்டு ரஜினியை சந்திப்பேன். அதற்காக ரஜினியை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறேன் என்கிறார்.

‘யாரும்’என்று ரஜினி சொன்னது  பா.ஜ.க.வையா?

இதையெல்லாம் பார்த்துதான், மேலும் மேலும் தன்னை வேதனைப் படுத்துகிறார்களே என்ற கவலையில் இருந்த ரஜினி, ரசிகர்கள் போராட்டத்தினை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு, அவர்களுக்கு சொல்வது போல எல்லோருக்குமாக, குறிப்பாக பாஜவுக்குத்தான் , மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று ரஜினி அறிவிப்பு செய்திருகிறார். அதனால்தான் ரசிகர்கள் என்று குறிப்பிடாமல், பொதுவாக ‘யாரும்’ என்று குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த் என்கிறார்கள்.