லைன்மேன் போல லைன் உமன்கள்… நீதிமன்றத்தின் படியேறி உரிமை பெற்றனர்

 

லைன்மேன் போல லைன் உமன்கள்… நீதிமன்றத்தின் படியேறி  உரிமை பெற்றனர்

லைன் மேன் மட்டும்தான் இருக்க வேண்டுமா? ஆண்- பெண் சமம் என்று சொல்லும்போது லைன் உமன் இருந்தால் என்ன? என்று தெலுங்கானாவில் ஐஐடி படிப்பில் எலெக்ட்ரிக்கல் முடித்த பெண்கள் 8 பெண்கள் தாங்களும் மின்வாரியத்தில் பணிபுரிய வேண்டும் என்று விண்ணப்பித்தனர்.

ஆனால், அந்த வேலை ஆண்கள் பார்க்கும் வேலை என்பதால், பென்களுக்கு வழங்க முடியாது என்று மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து அந்த பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆண் – பெண் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று கூறிய நீதிமன்றம், பெண்களுக்கும் மின்வாரியத்தில் பணி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

லைன்மேன் போல லைன் உமன்கள்… நீதிமன்றத்தின் படியேறி  உரிமை பெற்றனர்

இதையடுத்து அந்த 8 பெண்களுக்கும் பயிற்சி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் போஸ்ட் கம்பத்தில் ஏறிய இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

பாப்புரி ஸ்ரீஷா, பாரதி ஆகிய இரண்டு பெண்கள் தெலுங்கானா மின்வாரியத்தில் லைன் உமன்களாக இருக்கும் தகவல், தெரிந்து தெலுங்கானா மக்கள் மீடியாக்கள் மூலமாக தங்களது வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.