ரசிகர்கள் என்ன தக்காளி தொக்கா? ரஜினிக்கு எதிராக கொந்தளிப்பு

 

ரசிகர்கள் என்ன தக்காளி தொக்கா? ரஜினிக்கு எதிராக கொந்தளிப்பு

கட்சி தொடங்க மாட்டேன் என்று ரஜினி சொல்லிவிட்டாலும் அந்த முடிவினை மறு பரிசீலனை செய்யுமாறு ரஜினி ரசிகர்கள் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர்.

ரசிகர்கள் என்ன தக்காளி தொக்கா? ரஜினிக்கு எதிராக கொந்தளிப்பு

இந்நிலையில் இன்று அப்போராட்டம் தொடர்பாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’நான் அரசியலுக்கு வராதது பற்றி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினிமக்கள் மன்ற பொறுப்பிலிருந்தும் மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள். தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது’’ என்று தெரிவித்திருக்கிறார்.

’’நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியிருக்கிறேன்’’என்றும் சொல்லி இருக்கும் ரஜினி, ‘’நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு செய்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’’என்றிருக்கிறார்.

ரசிகர்கள் என்ன தக்காளி தொக்கா? ரஜினிக்கு எதிராக கொந்தளிப்பு

ரஜினியின் இந்த அறிக்கைக்கு அவரது ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். உங்கள் உடல் நலம்தான் முக்கியம் தலைவா.. இதுதான் நல்ல முடிவு என்று பலரும் சொல்லி வரும் வேளையில், ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். தலைவா மீண்டும் தங்களது முடிவினை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள்.

’’இத நீங்க 96 லேயே சொல்லி இருக்கலாமே… ’’என்று ஒரு ரசிகர் சொல்ல, ’’நன்றி தலைவர்… இதை கால் நூற்றாண்டுக்கு முன்பே சொல்லி இருக்கலாம்’’என்றும் பலர் சொல்ல, ‘மூடிட்டு இருங்கடானு சொல்றாரு தலைவரு.. ’என்று ஒருவர் ஆத்திரத்துடன் தனது கருத்தினை பதிவிட்டிருக்கிறார்.

’’இவரே வர்ரேன்னு சொல்லுவாராம்.. இவரே வரமாட்டேன்னு சொல்லுவாராம் ரஜினி ரசிகர்கள் என்ன தக்காளி தொக்கா?’’என்றும் ஒருவர் கொந்தளித்திருக்கிறார்.

https://twitter.com/10000_xavier/status/1348505102710042625