1996இல் ஸ்டாலின் மேயரானதற்கு ரஜினியே காரணம் – பழைய விஷயத்தை கிளறும் கராத்தே தியாகராஜன் 

1996இல் ஸ்டாலின் மேயரானதற்கு ரஜினியே காரணம் – பழைய விஷயத்தை கிளறும் கராத்தே தியாகராஜன் 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கராத்தே தியாகராஜன் மரியாதை செலுத்தினர்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கராத்தே தியாகராஜன் மரியாதை செலுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், “ரஜினியை பொருத்தவரையில் சுயமாக பேசுபவர். ஸ்டாலின்  தூண்டி விடுவதால் தான் பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சின்ன கருத்தை சொன்னால்கூட பெரிதாக பேசுகிறார்கள்.  ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் முரசொலியில் எழுத வேண்டியதுதானே. ரஜினி நடிகர் என்கிறார் ஸ்டாலின் ஆனால் 1996இல் ஸ்டாலின் மேயராவதற்கு  ரஜினி படத்தை பயன்படுத்தினாரே. அதை ஸ்டாலின் மறந்துவிட்டாரா?

கராத்தே தியாகராஜன் - ரஜினிகாந்த்

ரஜினிக்கு மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஸ்டாலின் பாஜகவிற்கு ஆதரவு வழங்கி டில்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஸ்டாலின் அவர்களே ரஜினியிடம் லெப்ட்ல வைச்சுக்கோங்க, ரைட்ல வச்சுக்கோங்க நேராக வைத்துக்கொண்டால் அரசியலில் தோற்றுவிடுவீர்கள்” எனக்கூறினார்.