உங்கள் பல்டிக்கு அளவே இல்லையா? ராமதாசை சாடிய திமுக

 

உங்கள் பல்டிக்கு அளவே இல்லையா? ராமதாசை சாடிய  திமுக

அந்த நாள் முதல் இந்த நாள் வரைக்கும் உங்கள் அரசியல் எத்து விளையாட்டுகளுக்காக நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் மறந்து விடுகின்றீர்கள். அல்லது நாங்கள் எல்லாம் மறந்திருப்போம் என்று எண்ணி எங்கள் தலையில் மஞ்சள் அரைத்து நீங்களும் , சின்ன அய்யா அன்புமணியும் மஞ்சள் குளிக்கிறீர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது அந்த கடிதத்தில்.

ராமதாசுக்கும், அன்புமணிக்கும் பாட்டாளி சொந்தம் ஒருவர் கடிதம் எழுதுவதுபோல் முரசொலி நாளிதழிலில் அக்கடிதம் எழுதப்பட்டிருக்கிறது.

உங்கள் பல்டிக்கு அளவே இல்லையா? ராமதாசை சாடிய  திமுக

அக்கடிதத்தில் மேலும், ‘’நீங்கள் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்து உங்கள் வரலாற்றை யாராவது அரசியல் மாணவர்கள் ஆராய்ந்தால் நீங்கள் அடுத்தடுத்து கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தடுக்கி விழுந்து தடம் புரண்ட நிகழ்வுகளை கண்டு மூர்ச்சித்து விழுந்து விடுவான்.

ஆயிரம் நாவு படைத்த அதிசேஷன் என்று சொல்வார்கள். நீங்கள் அந்த ஆதிசேசனையும் மிஞ்சிவிட்டீர்கள். எப்படி அய்யா.. இப்படி அடிக்கடி பல்டி அடிக்க உங்களால் முடிகிறது?

பதவிகளையும் பவிசுகளையும் தேவைக்கு மீறி பெற்று அனுபவித்து வருகிறீர்கள். இனியாவது அந்த ஆசையை விட்டொழித்துவிட்டு உங்களை நம்பி இருக்கும் மக்களுக்கு நல்வழி தேடக்கூடாதா?

உங்கள் பல்டிக்கு அளவே இல்லையா? ராமதாசை சாடிய  திமுக

நேற்றுவரைக்கும் உங்களை நம்பிய வன்னியகுல இளைஞன் கடிதம் இது. நீங்களும் உங்கள் அருமைசெல்வன் சின்ன அய்யா அன்புமனியும் இன்னும் எத்தனை காலம்தான் இந்த சமுதாயத்தை ஏமாற்றுவது என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? பொய் சொல்வதற்கு ஞாபக சக்தி நிறைய தேவை என்பார்கள். இளம்வயதிலேயே பல நேரங்களில் தங்களுக்கு ஞாபக சக்தி தள்ளாடியிருக்கிறது. இப்போது வயதான காலம் என்பதால் அடிக்கடி தடுமாற தொடங்கிவிட்டது’’ என்று குறிபிடப்பட்டிருக்கிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக, திடீரென்று அதிமுக கூட்டணியை உறுதி செய்தது. வர இருக்கும்சட்டமன்ற தேர்தலை முன்னிட்டும், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக அதிமுகவுடன் கூட்டணியை இறுதி செய்ய இருப்பதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட திமுக, இவ்வாறு முரசொலியில் கடிதம் எழுதி இருக்கிறது.