நீதித்துறையின் சிறந்த மனிதருக்கான விருது.. விழாவில் பங்கேற்காத சதாசிவம்

 

நீதித்துறையின் சிறந்த மனிதருக்கான விருது.. விழாவில் பங்கேற்காத சதாசிவம்

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த காடப்பநல்லூரை சேர்ந்த சதாசிவம், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஓய்வு பெற்றபின்னர் சொந்த ஊரில் விவசாயம் பார்த்து வந்தார்.

கடந்த 2014ம் ஆண்டில் அவர் கேரள மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.

நீதித்துறையின் சிறந்த மனிதருக்கான விருது.. விழாவில் பங்கேற்காத சதாசிவம்

இந்நிலையில் நீதித்துறையில் சிறந்த மனிதராக விளங்கியவர் என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சதாசிவத்திற்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் விருது வழங்கி கவுரவித்துள்ளனர்.

கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அமைப்பின் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சதாசிவத்திற்கு விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கேரள முன்னாள் முதல்வரும் கேரள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் பங்கேற்றார்.

சதாசிவத்திற்கு விருது வழங்க நடந்த விழாவில் சதாசிவம் பங்குகொள்ளவில்லை. அவரின்சார்பில் கேரள ராஜ்பவன் அதிகாரி சாந்தி அந்தவிருதினை பெற்றுக்கொண்டார். ஆனாலும், சதாசிவம் இவ்விழாவில் பங்கேற்காதது பலரையும் அதிருப்தியடைய வைத்தது.