பெண்களை அடிக்கிறது மட்டும் திமுகவுக்கு கைவந்த கலை… அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விளாசல்

 

பெண்களை அடிக்கிறது  மட்டும் திமுகவுக்கு  கைவந்த  கலை…  அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விளாசல்

இந்திராகாந்தியை அடிச்சாங்க… புரட்சித்தலைவி அம்மாவோட சேலையை புடிச்சி இழுத்தாங்க.. இன்னைக்கு பூங்கொடிய அடிக்கிறாங்க.. இன்னும் எத்தனயோ பெண்களை அடிச்சிருக்காங்க… என்று திமுகவை சாடினார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

பெண்களை அடிக்கிறது  மட்டும் திமுகவுக்கு  கைவந்த  கலை…  அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விளாசல்

விருதுநகர் பி.ஆர்.சி. பணிமனை முன்பாக அண்ணா தொழிற்சங்கபேரவை சார்பில் ஆலோசனை மற்றும் வாயில் விளக்க கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

’’ஸ்டாலின் ரோட்டுல இறங்கி தெருவுக்குள்ள போயிட்டாரு. தெருவுலேயே உட்கார்ந்திட்டாரு. என்னன்னு கேட்டா கிராமசபை கூட்டமாம். ஊர் ஊரா போயி மக்களை ஏமாற்றி மனு வாங்குற ஸ்டாலின் அந்த மனுக்களை யாருகிட்ட கொடுக்கிறார். விருதுநகர்ல கூட்டம் போட்டு மனுவாங்குறாரு. யாருகிட்ட கொடுப்பீங்கனு கேட்டா ராஜேந்திரபாலாஜிகிட்ட கொடுப்பேன்னு சொல்லுறாரு. இப்படி சொன்னா கோபம்வராதா? ராஜேந்திரபாலாஜிகிட்ட கொடுக்குறதுக்கு இடையில நீங்க எதுக்கு? நாங்களே கொடுக்குறோம்னு சொல்லுறாங்க. ’’என்ற கே.டி.ஆர்.,

பெண்களை அடிக்கிறது  மட்டும் திமுகவுக்கு  கைவந்த  கலை…  அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி விளாசல்

’’அப்படித்தான் கோயம்புத்தூர்ல பூங்கொடிங்கிறபெண். இந்த மனுவை எல்லாம் எங்க கொடுக்கப்போறீங்க? என்று ஸ்டாலினிடம் கேட்க, எஸ்.பி.வேலுமணிகிட்ட கொடுத்திடுவேன்னு சொல்ல, அதுக்கு எதுக்கு நீங்க வர்றீங்கன்னு கேட்டதுக்கு சண்டை வந்துருச்சு. அடிச்சுப்புட்டாங்க.

பெண்களை அடிக்கிறது மட்டும் திமுகவுக்கு கைவந்த கலை. ஆண்களை அடிச்சா திருப்பி அடிச்சிடுவாங்க. அதனால அடிக்க மாட்டாங்க. பயப்படுவாங்க.’’என்றார்.

மேலும், ‘’இந்திராகாந்தியை அடிச்சாங்க… புரட்சித்தலைவி அம்மாவோட சேலையை புடிச்சி இழுத்தாங்க.. இன்னைக்கு பூங்கொடிய அடிக்கிறாங்க. அழகுநிலையத்துக்கு போவங்க. அங்கே பணம்கேட்டு குத்துவாங்க. ஓட்டல்ல போய் நல்லா பிரியாணி சாப்பிட்டுவிட்டு காசு கேட்டா உன்பிரியாணியில எலும்பே இல்லேன்னு சொல்லுவாங்க. அதான் கறி இருந்துச்சேன்னு சொன்னா. ஏன் எலும்பு இல்லேன்னு கேட்டு வியாக்கியானம் பேசுவாங்க’’என்றார்.