அதிமுகவுடன் தான் கூட்டணி.. முடிவை மாற்றிக்கொண்ட பாமக

 

அதிமுகவுடன் தான் கூட்டணி.. முடிவை மாற்றிக்கொண்ட பாமக

அதிமுக கூட்டணியில் இருந்தாலும் தொகுதிப்பங்கீட்டில் தங்களுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதால் இட ஒதுக்கீடு போராட்டத்தினை கையில் எடுத்து முதல்வர் ஈபிஎஸ்க்கு நெருக்கடி கொடுத்து வந்தது பாமக என்ற பேச்சு எழுந்தது.

அதிமுகவுடன் தான் கூட்டணி.. முடிவை மாற்றிக்கொண்ட பாமக

சென்னையில் நடந்த போராட்டத்தின் போது அன்புமணியை அழைத்து பேசினார் முதல்வர். இடஒதுக்கீடு தொடர்பாக சிறிது நேரம்பேசினாலும், தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக அதிக நேரம் அப்போது பேசியிருக்கிறார்கள். அதில் உடன்பாடு எட்டாததால்தான், போராட்டத்தினை தொடர்ந்து வருகிறது பாமக என்றார்கள்.

ரஜினி கட்சி தொடங்கினால் மூன்றாவது அணி அமையும் அதில் பெரும்பான்மையான தொகுதிகளை பெற்று விடாலாம் என்றும் கணக்கு போட்டிருகிறது பாமக. திமுகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

அதிமுகவுடன் தான் கூட்டணி.. முடிவை மாற்றிக்கொண்ட பாமக

பாமகவை எப்படியாவது திமுகவுக்குள் கொண்டுவந்துவிடலாம் என்றுதான் துரைமுருகனும் முயன்று வந்ததாக சொல்லப்பட்டு வந்தது. அதனால்தான், தற்போது கூட்டணியில் இருப்போரை அவர் உதாசீனப்படுத்தி வருகிறார் என்றும் பேச்சு எழுந்தது.

ஆனால், திடீரென்று திமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிலர் பாமகவுக்கு எதிராக வாய்ஸ் கொடுப்பதை பார்த்தால் திமுகவுடன் பாமக கூட்டணி இல்லை என்றாகிவிட்டது.

ரஜினி கட்சி தொடங்கவில்லை என்பதால் அந்த பக்கமும் போக வாயிப்பில்லை. ஆக, பாமகவுக்கு இருக்கும் ஒரே சாய்ஸ்… அதிமுகதான்.

இதை உணர்ந்துதான், பாமக செயற்குழுவிலும் அதிமுக அரசுக்கு எதிராகவோ, முதல்வர் வேட்பாளர் குறித்தோ எதுவும்பேசவில்லை. அதுகுறித்த தீர்மானமும் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

அதிமுகவுடன் தான் கூட்டணி.. முடிவை மாற்றிக்கொண்ட பாமக

முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது அதிமுகவின் முடிவு. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் கூடித்தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ஜி.கே.மணி சொல்லி வந்த நிலையில், செயற்குழுவில் அதுகுறித்து எதுவும் பேசாததால், அதிமுகவுடன் தான் என்பதை பாமக முடிவு செய்துவிட்டது.

தொகுதிப்பங்கீட்டில்தான் இழுபறி இருப்பதாக தெரிகிறது. முதல்வரை ஜி.கே.மணி சந்தித்து பேசியது இட ஒதுக்கீடு தொடர்பான பேச்சு வார்த்தைக்குதான் என்றாலும், தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தைதான் நடந்தது என்கிறார்கள் பாமக சீனியர்கள் சிலர்.