பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு.. 199 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை!

 

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு.. 199 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை!

சமீப காலமாக அரசு நடத்தும் தேர்வுகளில் முறைகேடு நடப்பது வாடிக்கையாகி விட்டது. முதன் முதலில் நீட் தேர்வில் ஆரம்பித்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 1, குரூப் 2 என தொடர்ந்து முறைகேடு நடந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேரை வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத முடியாத படி அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு.. 199 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை!

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1, 058 விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப கடந்த 2017 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணித் தேர்வின் அறிவுப்பு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுப் பணிகளை மேற்கொண்டு தேர்வு நடத்தப்படும் தேதியை அறிவித்தது. அதன் படி கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி இத்தேர்வு நடந்து முடிந்தது. அதில் தேர்ச்சி பெற்ற 2000 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.

அப்போது 199 பேரின் மதிப்பெண்கள் மாற்றப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், விடைத்தாளை திருத்திய தனியார் நிறுவனத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அதற்கிடையே இந்த தேர்வை தமிழக அரசு ரத்து செய்தது. இதனையடுத்து தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத ஆசிரியர் தேர்வு வாரியம் தடை விதித்துள்ளது.