அவர்கள் நமக்கு உத்தரவிடும் முதலாளிகள்; நாம் தொழிலாளிகள்… ஓபிஎஸ்

 

அவர்கள் நமக்கு உத்தரவிடும் முதலாளிகள்; நாம் தொழிலாளிகள்… ஓபிஎஸ்

அஇஅதிமுக-வை வழிநடத்துவதே தொண்டர்கள் தான்; கழக தொண்டர்கள் தான் நமது எஜமானர்கள். முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் நாம் அனைவருமே மக்களுக்கு சேவையாற்றும் சேவகர்கள்! தமிழக மக்கள் தான் நமக்கு உத்தரவிடும் முதலாளிகள்; நாம் எல்லாரும் அவர்களுக்காக பணியாற்றும் தொழிலாளிகள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அவர்கள் நமக்கு உத்தரவிடும் முதலாளிகள்; நாம் தொழிலாளிகள்… ஓபிஎஸ்

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னை வானகரத்தில் இருக்கும் ஸ்ரீவாரு மண்டபத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ், கொரோனாவை விட கொடிய வைரஸ் திமுக. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் புதிய புரட்சி ஏற்படும். திமுகவை அரசியலை விட்டு அகற்ற வேண்டும். எதிர்க்கட்சியை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். கட்சிக்கு விசுவாசமாக இருங்கள். ஒற்றுமையுடன் செயல்படுங்கள். மனமாச்சரியங்களை கலைந்து வேறுபாடுகளை மறந்து கட்சியுடன் ஒன்றிணைந்து செயல்படுங்கள் என்று கூறினார்.

அவர்கள் நமக்கு உத்தரவிடும் முதலாளிகள்; நாம் தொழிலாளிகள்… ஓபிஎஸ்

மேலும், அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு. கோஷ்டி சேர்க்கும் ஆட்களே இல்லை என்றும் தெரிவித்தார்.

இன்று காலையில் வானகரத்தில் நடந்த செயற்குழு – பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு மாலையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

இதற்கிடையில், ஓபிஎஸ் இந்த பதிவினை பதிவிட்டிருக்கிறார்.