வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தவர் தமிழக புதிய ஆளுநரா…?

வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தவர் தமிழக புதிய ஆளுநரா…?

ரோசையாவை அடுத்த தமிழக ஆளுநருக்கான பட்டியலில் பன்வாரிலால் புரோஹித்துடன் கிருஷ்ணம் ராஜூவும் இருந்தார். ஆனால், 2017ல் பன்வாரிலால் புரோஹித் தமிழக ஆளுநரானார்.

வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தவர் தமிழக புதிய ஆளுநரா…?

பன்வாரிலால் புரோஹித்தின் பதவிக்காலம் விரைவில் முடிவடையும் நிலையில், அடுத்த ஆளுநர் யார் என்ற பேச்சு எழுந்திருக்கிறது.

இதில் பிரபல நடிகரான ஸ்ரீ கிருஷ்ணம் ராஜூ பெயர்தான் பரபரபாக பேசப்பட்டு வருகிறது. பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் பெரியப்பாதான் கிருஷ்ணம் ராஜூ. இவர் பிரபல தெலுங்க படநடிகர். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான இவர்தான் அடித்த தமிழக ஆளுநர் என்று உறுதியாக சொல்கிறார்கள்.

வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தவர் தமிழக புதிய ஆளுநரா…?

கிருஷ்ணம் ராஜூ, பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் நரசபுரத்தை சேர்ந்த கிருஷ்ணம் ராஜூ, காங்கிரஸில் சேர்ந்து 1991ல் நடந்த தேர்தலில் நரசபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின்னர் அவர் பாஜகவில் சேர்ந்து காக்கிநாடா தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.

வாஜ்பாய் அமைச்சரவையில் இருந்தவர் தமிழக புதிய ஆளுநரா…?

வாஜ்பாய் தலைமையிலான ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் கிருஷ்ணம் ராஜூ. 1999ல் நாடாளுமன்ற தேர்தலில் காக்கிநாடாவில் போட்டியிட்டு வென்று மக்களவையில் பாஜகவின் கொறடாவாக இருந்தவர். 2001ம் ஆண்டில் மத்திய அமைச்சரவையின் கேபினட்டிலும் இடம் பிடித்தார்.