2 லட்சத்தைத் தொடும் இறந்தோரின் எண்ணிக்கை – அமெரிக்காவில் கொரோனாவின் கோரம்

2 லட்சத்தைத் தொடும் இறந்தோரின் எண்ணிக்கை – அமெரிக்காவில் கொரோனாவின் கோரம்

இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 91 லட்சத்து  88 ஆயிரத்து 603 பேர்.    

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 679 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 28 ஆயிரத்து 325 பேர்.

2 லட்சத்தைத் தொடும் இறந்தோரின் எண்ணிக்கை – அமெரிக்காவில் கொரோனாவின் கோரம்

நேற்று மட்டுமே அமெரிக்காவில் 31,857 பேரும், பிரேசிலில் 14,597 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 93,215 பேராக அதிகரித்துள்ளனர். 

கடந்த ஒரு வாரத்திற்கு முன் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகம் என்றிருந்த நிலையில், தற்போது புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி வருகிறது அமெரிக்கா.

2 லட்சத்தைத் தொடும் இறந்தோரின் எண்ணிக்கை – அமெரிக்காவில் கொரோனாவின் கோரம்

உலகளவில் பார்க்கும்போது அதிகமான கொரோனா பாதிப்பு அமெரிக்காவில்தான். இன்றைய காலை நிலவரப்படி, அமெரிக்காவில் 67,08,458 ஆக இருக்கிறது.  39 லட்சத்துக்கு 74 ஆயிரத்து 949 பேர் சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கையும் உலக நாடுகள் அனைத்தையும் விட அமெரிக்காவிலேயே அதிகம். இன்று வரை  1,98,520  பேர் இறந்திருக்கிறார். இன்னும் ஓரிரு நாளில் 2 லட்சத்தைத் தொடும் என கணிக்கிறார்கள்.

2 லட்சத்தைத் தொடும் இறந்தோரின் எண்ணிக்கை – அமெரிக்காவில் கொரோனாவின் கோரம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் மட்டுமே 33,116 பேரும், நியூ ஜெர்ஸி நகரில் 16,153 பேரும் இறந்திருக்கிறார்கள்.

இறப்போர் டேட்டாவில் ஏப்ரல் 21-ம் தேதி மட்டுமெ 2748 பேர் இறந்திருக்கிறார்கள். ஏப்ரல் 15-ம் தேதி 2691 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள்.

ஜூலை மாதத்தில் இறப்பு விகிதம் குறைந்தாலும் ஆகஸ்ட்டில் அதிகரித்தது. ஏறியும் இறங்கியும் வருகிறது.

2 லட்சத்தைத் தொடும் இறந்தோரின் எண்ணிக்கை – அமெரிக்காவில் கொரோனாவின் கோரம்

கொரோனா தடுப்பூசி நவம்பர் 1-ம் தேதிக்குள் அமெரிக்காவுக்கு வந்துவிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதன்பிறகு நோயாளிகள் அதிகரிப்பதும், இறப்பதும் நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.