சமரசம் பேசிய செல்வி..டோஸ் விட்ட அழகிரி

 

சமரசம் பேசிய செல்வி..டோஸ் விட்ட அழகிரி

அழகிரி அவ்வப்போது முறுக்கிக் கொள்ளும் போதெல்லாம் செல்விதான் அவரை சமாதானப்படுத்துவார். கருணாநிதி இருந்தவரையிலும் செல்விதான் சமாதானப்புறாவாக இருந்து வந்தார். அதன் பிறகு கனிமொழியும் சில நேரங்களில் சமாதானப்புறாவாக பறந்திருக்கிறார்.

சமரசம் பேசிய செல்வி..டோஸ் விட்ட அழகிரி

கருணாநிதி இல்லாத நிலையில், செல்வியும், கனிமொழியும் சமாதானப்புறாவாக பறக்க ஸ்டாலின் விரும்பாததால் அவர்களும் அது பற்றி பேசாமல் இருந்துவிட்டனர்.

ஸ்டாலினா? அழகிரியா? என்று வந்தபோது, கனிமொழியும் ஸ்டாலின் பக்கம் சாய்ந்துவிட்டார். அதனால்தான், அழகிரி கட்சி தொடங்கினாலும் அதனால் திமுகவுக்கு ஒன்று பாதிப்பு கிடையாது என்று பேசி வருகிறார்.

சமரசம் பேசிய செல்வி..டோஸ் விட்ட அழகிரி

எனக்கு முதல்வர் ஆகணும் என்கிற எண்ணம் இல்லை. ஆனால், நீ ஆக முடியாது. உன்னை விடமாட்டேன். என் ஆதரவாளர்களும் விடமாட்டார்கள் என்று ஆவேசப்பட்டதோடு அல்லாமல், திமுக நிர்வாகிகளையும், திமுக எம்.எல்.ஏக்களையும் வளைத்து வருகிறார் அழகிரி. இத்தனை நாளும் அழகிரி விசயத்தில் அலட்சியமாக இருந்த ஸ்டாலின், இதில் ரொம்பவே அதிர்ந்து போயிருக்கிறார்.

அதனால், செல்வியை விட்டு சமாதானம் பேசச் சொல்லி இருக்கிறார். ’’இத்தனை நாளும் எங்கே போயிருந்தீங்க. இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது. எல்லாம் தலைக்கு மேலே போய்விட்டது’’ என்று சொல்லிவிட்டு கடுமையாக டோஸ் விட்டிருக்கிறார் அழகிரி.

சமாதானமாகும் நிலையில் அழகிரி இப்போது இல்லை. அந்த எல்லையை அவர் தாண்டிவிட்டார் என்பதை அறிந்த ஸ்டாலின் செய்வதறியாது தவிக்கிறாராம்.