டிஜிட்டல் சேவை வரி – இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

 

டிஜிட்டல் சேவை வரி – இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்க ஐடி நிறுவனங்களை இந்தியா பாகுபாட்டுடன் நடத்துவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் அங்கு மின்னணு சேவைகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு ஐடி வரி என புதிய வரி விதிப்பை கொண்டு வந்துள்ளன. இந்த வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த வரிசையில் இந்தியாவும் மின்னணு சேவைகளை அளிக்கும் நிறுவனங்களுக்கு வரி விதிப்பை கொண்டு வந்துள்ளது. இது நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையாகும் என அமெரிக்க வர்த்தக பிரதிநிதித்துவ சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் சேவை வரி – இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சேவை அளித்தால், இந்த வரியை செலுத்த வேண்டும் என சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டம் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிராக உள்ளதாக அமெரிக்க வர்த்தக சபை தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இந்தியா அமெரிக்க வர்த்தக நடவடிக்கைகளில் சுமூகமாக சூழல் இல்லாத நிலையில், இந்த வரி விதிப்பும் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. இதையடுத்து இந்தியாவுன் தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளது.