சீமானின் வெறித்தனமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட சில இளைஞர்கள் … நாஞ்சில் சம்பத்

சீமானின் வெறித்தனமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட சில இளைஞர்கள் … நாஞ்சில் சம்பத்

ரஜினிகாந்தின் முடிவு ஒரு வகையில் ஏற்கதக்கது. ஆனால், அவர் மன்றத்தை பொறுத்தவரையிலும் அவரின் முடிவு ஏற்ககூடியதல்ல. அவர் மன்றத்து நிர்வாகிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். ரஜினிகாந்தின் முடிவினால் நிர்வாகிகளிடையே ஏற்பட்டிருக்க கூடிய நிலநடுக்கத்திற்கு அவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று கேட்கிறார் நாஞ்சில் சம்பத்.

சீமானின் வெறித்தனமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட சில இளைஞர்கள் … நாஞ்சில் சம்பத்

தனிப்பட்ட பாஜகவுக்கு தமிழகமக்கள் யாரும் வாக்களிக்கமாட்டார்கள். ஆனால், சூப்பர் ஸ்டாருக்கு வாக்கு வரும். அதை தனதாக்கிக்கொள்ள பாஜக திட்டமிட்டது. அதுவும் தவிடு பொடியாகிவிட்டது.ஆனால், ரஜினிகாந்த் மட்டும் வந்திருந்தால் மிகக்கேவலமாக தோற்றிருப்பார். இந்த யதார்த்த நிலைமையை புரிந்துகொண்டு அவர் உடல்நிலையை காரணம் காட்டி தப்பித்துக்கொண்டார் என்று சொல்லும் அவர்,

சீமானின் வெறித்தனமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட சில இளைஞர்கள் … நாஞ்சில் சம்பத்

கமல்ஹாசன் பிரச்சாரங்களில் அழுக்குசட்டையோடும், லுங்கியோடும் நிற்கும் விழும்புநிலை மக்கள் இல்லவே இல்லை. கொள்கையை காப்பி அடித்துவிடுவார்கள் என்று சொல்லும் அதிபுத்திசாலியை தமிழகம் இப்போதுதான் பார்க்கிறது. ரஜினியை வழிமொழிந்து அவரும் விலகிவிடுவது நல்லது என்கிறார்.

சீமானின் வெறித்தனமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட சில இளைஞர்கள் … நாஞ்சில் சம்பத்

நாம் தமிழர் கட்சியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் எல்லோரும் போய்விட்டார்கள். ஒரே ஒரு மனிதர் சீமான் மட்டும் இருக்கிறார். சீமானின் வெறித்தனமான பேச்சினால் ஈர்க்கப்பட்டு சில இளைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், திமுகவை பொறுத்தவரை சென்னை என்பது திமுகவின் கோட்டை. அதிலும் கொளத்தூர் தொக்தி என்பது அவருக்கு ரொம்ப ஸ்பெஷல். அங்கே, ஸ்டாலினை எதிர்த்து சீமான் நின்றால் கட்சி தலைவரே டெபாசிட் இழந்துவிட்டார் என்ற செய்தியை கொளத்தூர் மக்கள் சீமானுக்கு தருவார்கள் என்கிறார் அழுத்தமாக.