பிப்ரவரியில் பாமக – அமமுக இறுதிகட்ட பேச்சுவார்த்தை

 

பிப்ரவரியில்  பாமக – அமமுக இறுதிகட்ட பேச்சுவார்த்தை

சசிகலாவின் விடுதலை அதிமுகவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்திருப்பதை பார்க்கும் போது அதிமுகவை அவர் கட்டுக்குள் வைத்திருப்பதாகவே தெரிகிறது. அதே நேரம் சசிகலா விடுதலையாகி வந்ததும் அமமுகவினை அதிமுகவுக்கு நிகராக பலப்படுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் முயன்று வருகிறார்.

பிப்ரவரியில்  பாமக – அமமுக இறுதிகட்ட பேச்சுவார்த்தை

வரும் தேர்தலில் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தீவிரம்காட்டி வரும் தினகரன், வலுவானகூட்டணி அமைப்பதில் மும்முரமாக இருக்கிறார். தங்கள் கூட்டணிக்குள் பாமக வருவதைத்தான் அவர் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். பாமக தங்கள் பக்கம் வந்துவிட்டால் அதன் பின்னர்பிற கட்சிகளை சுலபமாக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்று கணக்குபோடும் தினகரன், பாமகவிடம் இதுவரைக்கும் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி இருக்கிறார்.

பிப்ரவரியில்  பாமக – அமமுக இறுதிகட்ட பேச்சுவார்த்தை

நடந்த இந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் ராமதாசோ, அன்புணியோ பங்கேற்கவில்லையாம். பாமக நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். கூட்டணியை இறுதி செய்யலாமென்று தினகரன் கொடுக்கும் நெருக்கடிக்கு, தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்குது. அதற்குள் என்ன அவசரம்? என்றும், பிறகு பேசி முடிவெடுப்போம் என்றும் பதில் சொல்லி இருக்கிறார் ராமதாஸ்.

இப்போது என்ன அவசரம்? பிறகு பேசி முடிவெடுப்போம் என்று ராமதாஸ் சொல்லியிருப்பதால், அவர் கூட்டணிக்கு வருவது என்று தனது நிர்வாகிகளிடம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் தினகரன்.

கூட்டணியை அவர் தவிர்ப்பதாக இருந்தால், வேண்டாம் என்றுதானே சொல்லி இருப்பார். பிறகு பேசுவோம் என்று சொல்லி இருப்பதால், பாமக -அமமுக கூட்டணி உறுதியாகிவிட்டது என்ற ரீதியிலேயே எல்லோரிடமும் பேசி வருகிறார் தினகரன்.

சசிகலா 27ம்தேதி விடுதலையாகி வந்ததும், பிப்ரவரியில் இறுதிகட்ட பேச்சுவார்த்தையினை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவிலும் இருக்கிறாராம் தினகரன்.