“தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது….” ஜெய்சங்கரின் கருத்து பற்றி நிர்மலா சீதாராமன் விளக்கம்

 

“தமிழர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றுவது….” ஜெய்சங்கரின் கருத்து பற்றி நிர்மலா சீதாராமன் விளக்கம்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்றுநாள் பயணமாக கடந்த 5ம் தேதி அன்று தனி விமானத்தில் இலங்கை சென்றார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே ஆகியோரை நேற்று முன் தினம் சந்தித்து பேசினார். மூன்றாவது நாளான நேற்று ஜெய்சங்கரை சம்பந்தன் தலைமையினாலான தமிழ் தேசிய கூட்டணி பிரதிநிதிகள் சந்தித்தது. தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார்.

“தமிழர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றுவது….” ஜெய்சங்கரின் கருத்து பற்றி நிர்மலா சீதாராமன் விளக்கம்

இலங்கை பயணத்தில், மீன்வளத்துறைஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தோட்ட வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜீவன் தொண்டைமான், ஊரக மேம்பாட்டுதுறை அமைச்சர் சதாசிவம் வியலேந்திரன் மற்றும் முன்னால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இராஜாங்க அமைச்சர் வியலேந்திரன் அவர்களுடனான சந்திப்பு வரவேற்புக்குரியது. கிழக்கு மாகாண நிலைகுறித்த அவரது கணிப்பை பாராட்டுகிறேன். அபிவிருத்தி பங்குடைமைத் திட்டங்களில் அவை உள்வாங்கப்படும் என்றும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்தவர்களை சந்தித்தமையினால் மகிழ்வடைகின்றேன். அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பரவலாக்கம், மாகாண சபைகளின் வகிபாகம் ஆகியவை குறித்து கலந்துரையாடினோம் என்றும், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது குழுவினரை சந்தித்தபோது பெருந்தோட்டப் பகுதிகளில் எமது அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடினோம். இப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கு இந்தியா தொடர்ந்து பங்களிப்பு வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

“தமிழர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றுவது….” ஜெய்சங்கரின் கருத்து பற்றி நிர்மலா சீதாராமன் விளக்கம்

இலங்கையில், வெளிஉறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இலங்கை தமிழர்களின் கோரிக்கைகளான -சம உரிமை, நீதி-நியாயம், தன்மானம்- அவற்றை நிறைவேற்றுவது இலங்கையின் தன்நலத்திற்கே நன்று என்று கூறினார். இவற்றில் இலங்கை அரசமைப்பு சட்டத்தின் 13வது திருத்த அமலாக்கமும், மாகாணங்களுக்கு அதிகாரங்களை முறையாக பகிர்ந்தளிப்பது கூட அடங்கும். இவைகளை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கையின் முன்னேற்றமும் வளமையும் நிச்சயமாக அதிகரிக்கும் என்றும் ஜெய்சங்கர் கூறினார் என்று தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

“தமிழர்களின் கோரிக்கைகளை  நிறைவேற்றுவது….” ஜெய்சங்கரின் கருத்து பற்றி நிர்மலா சீதாராமன் விளக்கம்

அவர் மேலும், ஜெய்சங்கரின் இந்த அறிக்கையின் மூலம் , இலங்கை அரசிடம் நேரிடையாக இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை உறுதியாக வழங்குவது பற்றி எடுத்து வைக்கப்பட்டது தெரியவருகிறது. பிரதமர் நரேந்திரமோடி அவர்களும் இலங்கை அதிபரிடம் தமிழர் நலன் பற்றி எடுத்துக்கூறியது நமக்கு நினைவில் இருக்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.