100 சீட் கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பாஜக?

 

100 சீட்  கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பாஜக?

பாஜக அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுப்பதால்தான் அதிமுக – பாஜக கூட்டணியில் இழுபறி நீடித்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

100 சீட்  கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பாஜக?

அதிக தொகுதிகள் கேட்டு நாங்கள் நெருக்கடி கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ள முருகன், ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டார். ஆனால், அவர் வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தந்தால் அதை வரவேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

பாஜக தரப்பில் 100 சீட் கேட்பதாகவும், இதனால் அதிமுக மிரண்டு போயிருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக, தமிழகத்தில் இதுவரைக்கும் பிரதானமாக இல்லாத பாஜகவுக்கு இத்தனை சீட் ஒதுக்குவதில் அதிமுக தலைமை ஒப்புக்கொண்டாலும் கூட, நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதனால்தான் இரு தரப்பிலும் இன்னமும் கூட்டணி இறுதி செய்யப்படாமல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.

100 சீட்  கேட்டு அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கிறதா பாஜக?

இந்நிலையில், அதில் உண்மை இல்லை என்று முருகன் இன்று விளக்கம் அளித்திருக்கிறார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காத நிலையில், அவரை வரும் தேர்தலில் வாய்ஸ் கொடுக்கச்சொல்லி பாஜக கேட்கும் என்ற பேச்சு இருந்து வரும் நிலையில், ஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டார். ஆனால், அவர் வரும் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தந்தால் அதை வரவேற்போம் என்றும் தெரிவித்துள்ளார்.