விஜய் குடும்ப சண்டை… பலிகடாவாகும் நிர்வாகிகள் – ரசிகர்கள்!

 

விஜய் குடும்ப சண்டை… பலிகடாவாகும் நிர்வாகிகள் – ரசிகர்கள்!

சாலிகிராமத்தில் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்த விஜய், திருமணத்திற்கு பின்னர் திருவான்மியூர் வீட்டிற்கு தனிக்குடித்தனம் சென்றார். பின்னர் அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பனையூருக்கு சென்றுவிட்டார்.

விஜய் குடும்ப சண்டை… பலிகடாவாகும் நிர்வாகிகள் – ரசிகர்கள்!

கில்லி படம் வரைக்கும் கூட தந்தையுடன் அடிக்கடி சண்டை போடுவார் விஜய் என்று கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். தனிக்குடித்தனத்திற்கு பிறகு விஜய்யுடனான தொடர்பு எஸ்.ஏ.சந்திரசேகருக்கு குறைந்தது. அதிலும், துப்பாக்கி படத்திற்கு பிறகு முற்றிலுமாக குறைந்துவிட்டது. துப்பாக்கி படத்திற்கு கதைகளை தானே நேரடியாக கேட்கும் முடிவுக்கு வந்துவிட்டார் விஜய்.

விஜய்யை விட்டு எஸ்.ஏ.சி. தூரமாக போவதற்கு இதுவும் ஒரு காரணமாகிவிட்டது.

விஜய் குடும்ப சண்டை… பலிகடாவாகும் நிர்வாகிகள் – ரசிகர்கள்!

தனக்கு சேர்ந்த கூட்டத்தை வைத்து கட்சி தொடங்கும் எண்ணத்தில் தான் இருக்கிறார் விஜய். ஆனால்,அதற்காக அவர் ஒரு நேரம் காலம் வைத்திருக்ககூடும்.

துப்பாக்கி படத்திற்கு முன்புவரையிலும் கதை கேட்டு முடிவு செய்து வந்ததால் எஸ்.ஏ.சிக்கு ஒரு மரியாதை இருந்து வந்தது. அதை இழந்ததால் நிறையவே கடுப்பாகி இருக்கிறார் எஸ்.ஏ.சி.

இதில் கட்சி தொடங்கும் தனது முடிவுக்கும் விஜய் ஒத்துழைக்காததால், அவர் போன போக்கிலேயே போவதால், மேலும் கடுப்பான எஸ்.ஏ.சி., உனக்கே அவ்வளவு இருந்தா உன்னைப்பெத்தவனுக்கு எவ்வளவு இருக்கும் என்று காட்ட துணிந்தார். அதனால்தான், கட்சி தொடங்கி பின்னர் அதை கேன்சல் செய்தார். இந்த களேபரத்தினால் விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் ஒன்றும் இழப்பில்லை. விஜய் மக்கள் மன்றத்து நிர்வாகிகளுக்கும் ரசிகர்களுக்கும்தான் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

விஜய் குடும்ப சண்டை… பலிகடாவாகும் நிர்வாகிகள் – ரசிகர்கள்!

தந்தைக்கு ஆதரவானவர்களை எல்லாம் மன்றத்திலிருந்து நீக்கி வந்த விஜய், இப்போது குடியிருக்கும் வீட்டையே காலி செய்யச்சொல்கிறார்.

தன்னிடம் வேலைபார்க்கின்றவர்கள் தங்குவதற்காக சென்னை சாலிகிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்பினை கட்டியிருக்கிறார் விஜய். அதில் தங்கி இருக்கும் ரவிராஜா, குமார் ஆகியோர் தந்தைக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி அவர்களை வீட்டை விட்டு வெளியேறும்படி சொல்லி இருக்கிறார் விஜய். அவர்கள் காலி செய்ய மறுக்கவே, அவ்விருவரையும் காலி செய்யச் சொல்லும்படி விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் புகார் அளித்திருக்கிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தில் செயலாளராக இருந்து வந்தவர் ரவிராஜா. துணைச் செயலாளராக இருந்து வந்தவர் குமார். இத்தனை ஆண்டுகள் விஜய்க்காக உழைத்திருக்கிறோம். இப்போது இப்படி நடந்துகொண்டால் எப்படி? என்று நியாயம் கேட்கிறார்கள் இருவரும்.

விஜய் குடும்ப சண்டை… பலிகடாவாகும் நிர்வாகிகள் – ரசிகர்கள்!

அப்பா -மகன் குடும்ப சண்டையில் நிர்வாகிகளும் ரசிகர்களும்தான் பலிகடாவாகிப் போகிறார்கள்.

குடும்ப சண்டை நிரந்தரமாகிவிடுமா என்ன? ஒரு நாள் ஒன்றுசேரத்தானே போகிறார்கள். அதையெல்லாம் யோசித்து எதையும் முடிவெடுக்க வேண்டும் விஜய் என்றே எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள்.