1980களில் குழந்தைகளை மகிழ்வித்த ஸ்பைடர்மேன் மீண்டும் வருகிறார் !

 

1980களில் குழந்தைகளை மகிழ்வித்த ஸ்பைடர்மேன் மீண்டும் வருகிறார் !

ஆகஸ்ட் மாதம் வெளியான ஸ்பைடர்மேன் ஃபேர் ஃப்ரம் ஹோம் படம் அமோக வரவேற்பை பெற்று வசூல் வேட்டை ஆடியது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் பட்டாளத்தைத் மார்வெல் ஸ்டுடியோஸில் வெளியான ஸ்பைடர்மேன் திரைப்படம் தக்கவைத்துள்ளது.

Spider man

ஆகஸ்ட் மாதம் வெளியான ஸ்பைடர்மேன் ஃபேர் ஃப்ரம் ஹோம் படம் அமோக வரவேற்பை பெற்று வசூல் வேட்டை ஆடியது. தற்போது ஸ்பைடர்மேன் உரிமையை வைத்துள்ள சோனி நிறுவனத்துக்கும், டிஸ்னியின் மார்வெல் ஸ்டுடியோஸுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் சில பிரச்னைகள் எழுந்தது.இதனால், ஸ்பைடர்மேன் திரைப்படம் மார்வெல் சீரிஸிலிருந்து நீக்கப்பட்டது. இதானல் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை சமுக வலைதளங்களில் பகிர்த்து கொண்டிருந்தார்கள். #SAVESPIDERMAN எனும் ஹேஸ்டேகையும் உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டு ஆக்கினர்.

Spider man

இந்நிலையில் சோனியும், டிஸ்னியும் இணைந்து புதிய ஒப்பந்தத்தில் சமரசம் ஆகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் வகையில், ஸ்பைடர்மேன் திரைப்படத்தின் நடிகர் “டாம் ஹாலண்ட்” தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் ” தி வுல்ஃப் ஆஃப் வோல் ஸ்ட்ரீட் படத்தில் இடம்பெற்ற ‘நான் எங்கேயும் வெளியேறவில்லை என்னும் வசனத்தை பதிவிட்டுள்ளார்.

Spider man

இது குறித்து மார்வெல் நிறுவனத்தின் தலைவர் கெவின் ஃபைஜ், “எம்.சி.யுவில் ஸ்பைடேயின் பயணம் தொடருவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், மார்வெல் ஸ்டுடியோவில் அனைவரும் தொடர்ந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சோனி தலைமை தகவல் அலுவலர் ராபர்ட் லாசன் கூறுகையில், “நாங்கள் இருவரும் சேர்ந்து முன்னேறுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்,” என கூறினார். மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் சீரிஸில் அடுத்தாக திரைக்கு வரும் ஸ்பைடர்மேன் திரைப்படம் 2021ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.