தேவைக்கு ஏற்ப வசதியை மாற்றும் போன் – லாவா நிறுவனம் புதிய முயற்சி!

 

தேவைக்கு ஏற்ப வசதியை மாற்றும் போன் – லாவா நிறுவனம் புதிய முயற்சி!

லாவா நிறுவனம் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ற வசதிகளைக் கொண்ட ஸ்மார்ட்போன்களை கொண்டுவர உள்ளது. தற்போது சந்தையில் உள்ள ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப இருப்பதில்லை. தேவைக்கேற்ப பல்வேறு போன்களை வாங்க வேண்டும் என்பதால், லாவா நிறுவனம் பிரத்யேக போன் வரிசையை அறிமுக செய்ய உள்ளது.

தேவைக்கு ஏற்ப வசதியை மாற்றும் போன் – லாவா நிறுவனம் புதிய முயற்சி!

வாடிக்கையாளர்கள் கேமரா வசதி, நினைவகம் மற்றும் வண்ணங்களை தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப வெளிப்படுத்தினால் அதற்கு ஏற்ப வடிவமைத்து தர முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தங்களது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த தனிப்பட்ட வசதி கொண்ட போன்களை வரும் 11 ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.

இது தொடர்பாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், உலக அளவில் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ற போன்களை கொண்டு வருவதுஇதுதான் முதல் முயற்சி என குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, கேமரா வசதி என்றால் அதில் 66 வகையான காம்போ கொடுக்கப்பட்டுள்ளன. ரேம் மற்ற்ம் நினைவக வசதிகளையும் வாடிக்கையாளரே தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர்களின் சுதந்திர மனநிலைக்கு ஏற்ப இந்த வகை போன்கள் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த போன்களை எந்த நேரத்தில் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப மேம்படுத்திக் கொள்ளும் வசதியையும் அளிக்க உள்ளதாக லாவா நிறுவனம் கூறியுள்ளது. இதன்மூலம் போன் வசதி போதவில்லை என மற்றொரு போன் வாங்க தேவையில்லை. எந்த நேரத்திலும் தங்களது போன் வசதியை மேம்படுத்திக் கொள்ளலாம். குறைந்த வசதியில் இருந்து அதிக வசதி கொண்டதாக போனை மாற்றிக் கொள்ள முடியும். இந்த வசதி மற்றும் இதற்கான வடிவமைப்பு முழுவதும் இந்திய மென்பொருள் வல்லுநர்களால் உருவாக்கப்பட்டுள்ளது என லாவா தெரிவித்துள்ளது.

இந்த புதிய மாடல் Z1 வரிசையில் வெளியாக உள்ளது. 2ஜிபி ரேம் வசதியுடன் தொடங்கும் இந்த மாடலின் ஆரம்ப விலை 5 ஆயிரத்து 499 ரூபாயாக இருக்கும். அதிலிருந்து வாடிக்கையாளர்கள் தேவைக்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த வரிசையில் Z2 , Z4, Z6 என மேம்படுத்தப்பட்ட மாடல்களும் கிடைக்கும். இது தவிர MyZ என வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்பவும் போன் வடிவமைப்பை கேட்டு பெறலாம்.

ஏற்கெனவே இந்திய சந்தையில் முக்கிய கவனம் செலுத்திய லாவா நிறுவனம் தற்போது, புதிய தனிப்பட்ட வசதி கொண்ட போன் மூலம் மீண்டும் சந்தையை கவனிக்க வைத்துள்ளது.