ஒரே நாளில் ரெண்டு இடி! அதிர்ச்சியில் அதிமுக! அமித்ஷாவின் அதிர்வுகள்?

 

ஒரே நாளில் ரெண்டு இடி! அதிர்ச்சியில்  அதிமுக! அமித்ஷாவின் அதிர்வுகள்?

யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்று சொல்வது போல, அமித்ஷா சென்னை வருவதற்கு முன்பாக அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது என்ற விமர்சனம் எழுந்திருக்கும் நிலையில், அமித்ஷாவின் வருகை ரத்து ஆகியிருக்கும் நிலையிலும் அதிமுகவுக்கு நெருக்கடி தொடர்கிறது.

எப்போதோ நடந்த பொள்ளாட்சி வழக்கில் இன்று ஒரு டுவிஸ்ட் வரும் என்று அதிமுக கொஞ்சமும் நினைத்து பார்த்திருக்காது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ஒரு விவகாரம் கையில் கிடைத்திருக்கிறது.

ஒரே நாளில் ரெண்டு இடி! அதிர்ச்சியில்  அதிமுக! அமித்ஷாவின் அதிர்வுகள்?

தமிழகத்தையே உலுக்கி எடுத்த பொள்ளாட்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டிருப்பது தமிழக அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் #பெண்களின்எதிரிஅதிமுக என்ற ஹேஷ்டேக்கினை இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகிறார்கள்.

அதிமுக தலையில் விழுந்த இது ஒரு இடி என்றால், அடுத்த இடியாக , திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பது விதிமீறல், திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பபெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் முதல் 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் இயக்க அனுமதிக்கப்பட்டன. 50 சதவிகித அனுமதியால் புதுப்படங்கள், பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்தன. பழைய படங்களே தியேட்டரில் வெளியாகி ஒடின.

ஒரே நாளில் ரெண்டு இடி! அதிர்ச்சியில்  அதிமுக! அமித்ஷாவின் அதிர்வுகள்?

இதனால், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டுமென நடிகர்கள் விஜய், சிம்பு, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு மருத்துவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது. மீண்டும் கொரோனா அதிகரிக்க வாய்ப்பாகிவிடும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்தனர். திரையுலகில் இருக்கும் சிலரே, குறிப்பாக நடிகர் அரவிந்த் சாமியே கூட 100 சதவிகித அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் , திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பது விதிமீறல், திரையரங்குகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை திரும்பபெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

ஒரே நாளில் ரெண்டு இடி! அதிர்ச்சியில்  அதிமுக! அமித்ஷாவின் அதிர்வுகள்?

திரையரங்குகளில் 50 சதவீதம் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

ஒரே நாளில் ரெண்டு இடி! அதிர்ச்சியில்  அதிமுக! அமித்ஷாவின் அதிர்வுகள்?

வரும் 14ம் தேதி அமித்ஷா சென்னை வருவதாகவும், அப்போது கூட்டணி தொடர்பான பேச்சுகள் இருக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அதிமுகவுக்கு அடுத்தடுத்து வரும் நெருக்கடிகளால், யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்று சொல்வது போல, அமித்ஷா சென்னை வருவதற்கு முன்பாக அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது என்ற விமர்சனம் எழுந்திருக்கும் நிலையில், அமித்ஷாவின் சென்னை வருகை ரத்தாகி இருக்கும் நிலையிலும் அதிமுகவுக்கு நெருக்கடிகள் தொடர்வதால், கூட்டணி விவகாரத்தில் திருப்தி இல்லாததால்தான் அமித்ஷா சென்னை வரவில்லை என்றும், அவர் சென்னை வராததின் அதிர்வுகள்தான் இன்று ஒரே நாளில் ரெண்டு இடியை தாங்கி அதிர்ந்து நிற்கிறது அதிமுக என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.