நாம செத்தாலும் அந்த ‘நடிகர்’கள்… எழுத்தாளரின் ஆதங்கம்

 

நாம செத்தாலும் அந்த ‘நடிகர்’கள்… எழுத்தாளரின் ஆதங்கம்

கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த அக்டோபர் மாதம் 50% பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அச்சமயம் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால், தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கவில்லை.

பின்னர், கடந்த நவம்பர் மாதம் 50 % இருக்கைகளுடன் திரையரங்கை திறக்க அரசு அனுமதி அளித்தது.

நாம செத்தாலும் அந்த ‘நடிகர்’கள்… எழுத்தாளரின் ஆதங்கம்

ஆனாலும், திரையுலகினரும் தியேட்டர் அதிபர்களும், 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதித்தால் மட்டுமே தங்களுக்கு சரிப்படும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய் மற்றும் நடிகர் சிம்புவும் கூட அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். விஜய் இது தொடர்பாக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

கோரிக்கைகளை ஏற்ற அரசு, 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளித்து நேற்று அரசாணை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்புக் குரலும் எழுந்துள்ளது.

நாம செத்தாலும் அந்த ‘நடிகர்’கள்… எழுத்தாளரின் ஆதங்கம்

நடிகர் அரவிந்த் சாமி, “சில சமயங்களில் 50% பார்வையாளர்களை அனுமதிப்பதே சிறந்தது. அது போன்ற காலக்கட்டம் தான் இது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அரவிந்த் சாமிக்கு எதிராக விஜய், சிம்பு ரசிகர்கள் வசைபாடி வருகிறார்கள்.

ஒரு இளம் மருத்துவர் ஒருவரும், இந்த காலகட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நிலைமயை சமாளித்து வருகிறோம். அப்படி இருக்கையில், 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அப்படி இருக்கும்போது ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

நாம செத்தாலும் அந்த ‘நடிகர்’கள்… எழுத்தாளரின் ஆதங்கம்

இந்நிலையில், ‘’கொரோனா காலத்தில் உயிருக்குப் போராடிய சொந்தங்களைக்கூடப் பார்க்க முடியாத ரசிகர்கள், தன் உயிரை பணயம் வைத்து தியேட்டருக்குப் போகப் போகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் மட்டும் பாவமல்ல, அவர்களோடு சேர்ந்து வாழ்கிற நாமும்தான். ஆனால் ஒரே ஆறுதல், நாம செத்தாலும் அந்த ‘நடிகர்’கள் நலமுடனும் வளமுடனும் இருப்பார்கள். அந்த மகிழ்ச்சி போதும். நாலுபேர் நல்லாயிருக்க நாலாயிரம் பேர் சாகறதுல ஒண்ணும் தப்பில்ல’’ என்று எழுத்தாளர் வே.மதிமாறன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.