’’இது சீமானுக்கும் முருகனுக்கும் கிடைத்த வெற்றி அல்ல; தொ.பவிற்கு கிடைத்தவெற்றி’’ – மதிமாறன்

’’இது சீமானுக்கும் முருகனுக்கும் கிடைத்த வெற்றி அல்ல; தொ.பவிற்கு கிடைத்தவெற்றி’’ – மதிமாறன்

பாஜக கோரிக்கையை ஏற்று தைப்பூச திருவிழாவை பொது விடுமுறை பட்டியலில் சேர்த்து விடுமுறை அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றி என தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்.

முப்பாட்டன் முருகனைப் போற்றிக் கொண்டாடும் திருநாளான தைப்பூசப் பெருவிழாவை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது என்று தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,

’’இது சீமானுக்கும் முருகனுக்கும் கிடைத்த வெற்றி அல்ல; தொ.பவிற்கு கிடைத்தவெற்றி’’ – மதிமாறன்

ஐவகைத் திணை நிலங்களில் தலைநிலமான குறிஞ்சித்திணையின் தலைவனும், தமிழர் இறைவனுமாகிய, எம்மின மூதாதை முருகப்பெருந்தகையைப் போற்றித் தொழும் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையை அறிவிக்க வேண்டும் எனக்கோரி நீண்ட நெடுங்காலமாக நாம் தமிழர் கட்சியும், அதன் பண்பாட்டுப் படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியும் பரப்புரையும், போராட்டமும் செய்து வருகிறது.

’’இது சீமானுக்கும் முருகனுக்கும் கிடைத்த வெற்றி அல்ல; தொ.பவிற்கு கிடைத்தவெற்றி’’ – மதிமாறன்

இதே கோரிக்கையை, அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ச்சியாக முன்வைத்தேன். கடந்தாண்டு ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை ஏற்று அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எழுத்தாளரும், திமுக பேச்சாளருமான வே.மதிமாறன், ‘’ரெண்டுபேரும் ஓரமா போய் விளையாடுங்க. இது தொ.பவிற்குக் கிடைத்த வெற்றி. சித்திரை 1. தை 1. இரண்டுமே தமிழ்ப்புத்தாண்டு கிடையாது. தைப்பூசம்தான் தமிழ்ப்புத்தாண்டு; அதுமட்டுமல்ல, தைப்பூசம் சைவசமயத்திற்கு உரியதன்று. அது வைணத்தோடு தொடர்புடையது என நிறுவியர் தொ. பரமசிவன். திருப்பாவை நோன்பு’’ என்று தெரிவித்துள்ளார்.

’’இது சீமானுக்கும் முருகனுக்கும் கிடைத்த வெற்றி அல்ல; தொ.பவிற்கு கிடைத்தவெற்றி’’ – மதிமாறன்

மேலும், ‘’மார்கழிப் பௌர்ணமியில் தொடங்கி தை மாதம் பௌர்ணமியில் முடிகிறது. தைப்பூசம் என்பது தை பௌர்ணமி. எனவே தைப்பூசம்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று ஓங்கி உரைத்த வைணவத் தமிழன் தொ.பவிற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. தொ.ப. ரசிகர்கள் சார்பாக முதல்வருக்கு 3 முறை நன்றி. அதாங்க நன்றி. நன்றி. நன்றி.’’ என்று கூறி பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறார்.