ஓபிஎஸ்க்கு நன்றி சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்

 

ஓபிஎஸ்க்கு  நன்றி சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ் மொழியினையும், தமிழ் கலாச்சாரத்தினை ஊக்குவிக்கும் விதமாக டெல்லியில் தமிழுக்கென்று ஒரு அகாடமியை அமைத்திருக்கிறது டெல்லி அரசு. தமிழை ஊக்குவிக்கும் விதமாக இதை செய்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரித்துள்ளார்.

டெல்லியில் தமிழுக்கு அகாடமி அமைத்ததற்காக தமிழறிஞர்களும், தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்களும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் டுவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ்க்கு  நன்றி சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் “டெல்லியில் தமிழ் அகாடமி” அமைத்துள்ள மாண்புமிகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டுவிட் போட்டிருந்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அந்த டுவிட்டுக்கு தமிழிலேயே பதில் டுவிட் போட்டிருந்தார். பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்! என்று தமிழிலேயே டுவிட் போட்டிருக்கிறார்.

ஓபிஎஸ்க்கு  நன்றி சொன்ன அரவிந்த் கெஜ்ரிவால்

இதையடுத்து, இந்தியத் திருநாட்டின் தலைநகரும், கலாச்சார ரீதியில் வளமைமிக்க, பன்முகத்தன்மை கொண்ட மாநிலமுமான புதுடில்லியில், தமிழர்களின் மொழி, கலை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், புதுடில்லி மாநில அரசு “தமிழ் மொழி அகாடமியை” நிறுவியுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், அன்னைத் தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமைசேர்க்கும் வண்ணம் “தமிழ் மொழி அகாடமியை” நிறுவியுள்ள மாண்புமிகு புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மாண்புமிகு துணை முதல்வர் மனீஷ் சிசோடியா ஆகியோருக்கு அனைத்து தமிழ்மக்களின் சார்பாகவும் எனது சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்த நிலையில்,

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நன்றி திரு. பன்னீர்செல்வம் ஜி. இந்தியாவில் உள்ள அனைத்து வகையான கலாச்சாரங்களையும் பாதுகாக்க மாண்புமிகு டெல்லி முதல்வர் திரு. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசு உறுதி பூண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.