தமிழக அரசுக்கு நன்றி.. சீமான்

 

தமிழக அரசுக்கு நன்றி.. சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முப்பாட்டன் முருகனைப் போற்றிக் கொண்டாடும் திருநாளான தைப்பூசப் பெருவிழாவை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசுக்கு நன்றி.. சீமான்

ஐவகைத் திணை நிலங்களில் தலைநிலமான குறிஞ்சித்திணையின் தலைவனும், தமிழர் இறைவனுமாகிய, எம்மின மூதாதை முருகப்பெருந்தகையைப் போற்றித் தொழும் தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையை அறிவிக்க வேண்டும் எனக்கோரி நீண்ட நெடுங்காலமாக நாம் தமிழர் கட்சியும், அதன் பண்பாட்டுப்படைப்பிரிவான வீரத்தமிழர் முன்னணியும் பரப்புரையும், போராட்டமும் செய்து வருகிறது. இதே கோரிக்கையை, அம்மையார் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலும் தொடர்ச்சியாக முன்வைத்தேன் என்று சொல்லும் சீமான், கடந்தாண்டு ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன் என்று சொல்கிறார் சீமான்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சந்தித்து 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தமைக்கு நன்றி தெரிவித்தும், தைப்பூசத்திற்கு பொது விடுமுறை அளிக்க கோரியும் கோரிக்கை மனு அளித்தார் என்றும் தமிழ்நாடு அரசும் அன்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், தனது கோரிக்கையை ஏற்று அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.