1966 ஆம் ஆண்டுக்கு பின்னர், வெளிநாட்டு விருந்தினர் இல்லாத குடியரசு தினவிழா ?

 

1966 ஆம் ஆண்டுக்கு பின்னர், வெளிநாட்டு விருந்தினர் இல்லாத குடியரசு தினவிழா ?

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், வெளிநாட்டு பிரதமர்கள் , ஜனாதிபதிகள் என முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்தியா சுதந்திரம் பெற்றபின், 1966 ஆண்டு முதல் வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். டெல்லியில் நடைபெறும் முப்படைகளின் அணிவகுப்பை இந்திய பிரதமருடன் வெளிநாட்டு பிரமுகர்கள் பார்வையிட்டுவார்கள். இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றும் வகையில், நமது நாட்டின் போர்க் கருவிகள் அணிவகுப்பு குடியரசு விழாவில் நடைபெறும்.

1966 ஆம் ஆண்டுக்கு பின்னர், வெளிநாட்டு விருந்தினர் இல்லாத குடியரசு தினவிழா ?

கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழாவில், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், கலந்து கொள்ள உள்ள வெளிநாட்டு பிரமுகர் யார் என்பதில் கேள்விக்குறியாக இருந்தது.

கொரோனா தொற்று அச்சம் காரணமாக வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்து கொள்வார்களா என்கிற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த ஆண்டு குடியரசு விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக போரிஸ் ஜான்சன் இந்திய வருகையை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1966 ஆம் ஆண்டுக்கு பின்னர், வெளிநாட்டு விருந்தினர் இல்லாத குடியரசு தினவிழா ?
போரிஸ் ஜான்சன்

கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவி வருகிறது. உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதுடன், அங்கு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் பிரிட்டனுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளன. இந்த நிலையில், விதிகளை மீறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டதால் போரிஸ் ஜான்சன் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் கொரோனா முதல் அலை பரவியபோதே, போரிஸ் ஜான்சன் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று திரும்பி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே கடும் கட்டுப்பாடுகளுடன் உள்ள நிலையில், இந்திய பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என அவரது ஆலோசகர்கள் கேட்டுள்ளனர். இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை வெளியுட்டுள்ள செய்தியில், பிரிட்டன் பிரதமரின் முடிவுக்கு பதிலளித்துள்ள இந்திய பிரதமர் மோடி, தற்போதைய சூழலை புரிந்து கொள்கிறோம், விரைவில் இங்கிலாந்தில் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

1966 ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்திய குடியரசு தின விழா வெளிநாட்டு பிரமுகர்கள் இல்லாமல் நடைபெற உள்ளது. எனினும், இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அணிவகுப்புகளும் , கொண்டாட்டங்களும் குறைவாகவே இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.