Home இந்தியா பள்ளி மாணவ, மாணவி யருக்கான பறையிசை ஆட்ட பயிற்சிப் பட்டறை

பள்ளி மாணவ, மாணவி யருக்கான பறையிசை ஆட்ட பயிற்சிப் பட்டறை

புதுச்சேரியில் பள்ளி மாணவ மாணவியருக்கான இரண்டு நாள் பறை இசைப் பயிற்சி முகாம், அரங்கேற்றத்துடன் நிறைவு பெற்றது.

பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழு மற்றும் புதுச்சேரி திருக்குறள் மன்றம் ஆகிய இரு அமைப்புகளின் சார்பில். தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி தலைமையில் புதுச்சேரி வேல்ராம்பட்டு வைஸ்மேன் பள்ளியில் நடைபெற்ற இந்த இரண்டு நாள் முகாமை பெண்ணாடம் – திருவள்ளுவர் கலைக்குழு தோழர்கள் இரண்டு நாட்கள் இங்கேயே தங்கி நடத்தி வைத்தனர்.

திருவள்ளுவர் கலைக்குழு தலைவர் தோழர் தே. இளநிலா தலைமையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரண்டாம் நாளாகப் பயிற்சி தொடர்ந்து நிலையில், மாலையில் அரங்கேற்ற விழாவுடன் பயிற்சி முகாம் நிறைவுற்றது. அரங்கேற்ற விழாவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன், தொழில் முனைவர் ப. தமிழ்முத்து பராங்குசம், இலட்சுமி கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் முத்துராமன், “குரலற்றவர்களின் குரல்” நிர்வாகி அசோக்ராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்று, பறை இசைப் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினர்.

இரு நாட்கள் பயிற்சி பெற்ற மாணவர்களின் அரங்கேற்றப் பறையிசை ஆட்டத்தை கண்டு சிறப்பு விருந்தினர்களும் பொதுமக்களும் பெற்றோர்களும் வியந்து பாராட்டினார்கள். சிறப்பான பயிற்சி அளித்த திருவள்ளுவர் கலைக்குழுவின் தலைவர் தே.இளநிலா, செயலாளர் தி.சின்னமணி, பொருளாளர் சி. பிரபாகரன், செ. செந்தமிழ், எ. ஆதித்யன் உள்ளிட்ட கலைக்குழு உறுப்பினர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் நூலாடைப் போர்த்தி பாராட்டுச் செய்தனர்.

இப்பயிற்சி தொடக்கம்தான் என்றும், தொடர்ந்து புதுச்சேரியில் வாரம் ஒருமுறை பறை இசைப் பயிற்சி வழங்கும் வகையில் தொடர் பயிலரங்கம் நடத்தத் திட்டமிடப்படும் எனறும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் இரா. வேல்சாமி தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர்- சீமான்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 10-ம் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு என...

இருசக்கர வாகனம் மோதி, அடையாளம் தெரியாத நபர் பலி!

மதுரை மதுரையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை - சிவகங்கை பிரதான சாலையில்...

பணியிடங்கள் நிரப்புவதிலும் கோல் மால்! உச்சநீதிமன்றம் காட்டம்!!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொது பிரிவில் சேர்க்காமல் மிகவும் பிற்படுத்த மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் சேர்த்ததற்கு உச்சநீதிமன்றம்...

மூன்று லேயர் மாஸ்க் அணிந்து கொரோனா பரவலைத் தடுத்திடுங்கள்! – நிபுணர்கள் எச்சரிக்கை

கொரோனா பரவலைத் தடுக்க முகக் கவசம், பொது சுகாதாரம், சமூக இடைவெளி பரிந்துரைக்கப்படுகிறது. இதைப் புறக்கணித்ததின் விளைவு புது புது வீரியம் மிக்க கொரோனா வந்து அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது....
TopTamilNews