திருவள்ளுவரா? ஔவையாரா? கன்பியூஸ் ஆன அமைச்சர்

 

திருவள்ளுவரா? ஔவையாரா?  கன்பியூஸ் ஆன அமைச்சர்

திண்டுக்கல் வடக்குபகுதி அதிமுக தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழக்கம்போலவே தனது உளறல் பேச்சினால் சலசலப்பை ஏற்படுத்தினார்.

திருவள்ளுவரா? ஔவையாரா?  கன்பியூஸ் ஆன அமைச்சர்

எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் சிறப்பாக மழை ப் பெய்கிறது என்று சொல்வதற்காக, அருமையாக மழை பெய்கிறது. மும்மாரி மழை பெய்கிறது. நிலத்தடி நீர் பெருகுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்துதான்
“நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை” என்று ஔவையார் என்றைக்கு பாடி வைத்திருக்கிறார் என்று சொன்னபோது மேடையிலும் கூட்டத்திலும் சலசலப்பு ஏற்பட்டது.

அதைக்கவனிக்காம அமைச்சர், அந்த காலத்தில் அரசனை மனதில் வைத்து அந்த அம்மா பாடி இருக்கிறார்கள் என்று பேசிக்கொண்டே போக, மேடையில் இருந்தவர் ஒருவர் ஓடிவந்து, அது ஔவையார் அல்ல; திருவள்ளுவர் என்றார்.

திருவள்ளுவரா? ஔவையாரா?  கன்பியூஸ் ஆன அமைச்சர்

என்னது..திருவள்ளுவரா? என்று கேட்டவர், ஔவையாரும் சொல்லி இருக்கிறார். அட அதை விடுங்க, யார் சொன்னா என்ன.. எழுதி வைத்துக்கொண்டா படிக்கிறோம்…சொல்லுற விசயம் சரியா இருக்குதான்னு பாருங்க.. என்று பேசியதால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த சலசலப்புக்கு எல்லாம் கவலைப்படாதவர் திண்டுக்கல் சீனிவாசன்.

’இயேசுநாதரை சுட்ட கோட்சே’ என்று போனவாரம்தான் ஒரு உளறல் பேச்சை பேசி சலசலப்பை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமா, அம்மா இட்லி சாப்பிட்டாங்கன்னு பொய் சொன்னோம், ஸ்லோர் பாய்சன் கொடுத்து ஜெயலலிதாவை கொன்றுவிட்டனர், அம்மா கொள்ளையடிச்ச பணத்தை தினகரன் செலவு செய்துகிட்டு இருக்கிறாரு, மற்ற மாநில முதல்வர்களூக்கு எம்.ஜி.ஆரை தெரியாது என்று அதிமுகவினரிடையே சலசலைப்பை மட்டுமல்லாது அடிக்கடி அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி வருகிறார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.