பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அதிகாரிகளோடு போட்டிபோடும் திமுக தலைவர்கள் !

 

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அதிகாரிகளோடு போட்டிபோடும் திமுக தலைவர்கள் !

தமிழக அரசு வழங்கும் 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்களை அரசு ஊழியர்கள் தான் வழங்கவேண்டும் , அதிமுகவினர் யாரும் பரிசு பொருள் கொடுக்கும் பணியில் ஈடுபடக்கூடாது என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். அதுமட்டுமில்லாமல், சென்னை உயர்நீதிமன்றதில் திமுக சார்பில் வழக்கு தொடர்ந்தனர். இந்த விவகாரத்தை ஒவ்வொரு கிராம சபை கூட்டத்திலும் ஸ்டாலின் மிகப்பெரிய குற்றமாக பேசி வந்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அதிகாரிகளோடு போட்டிபோடும் திமுக தலைவர்கள் !

இந்த நிலையில், இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதை வழங்குவதற்கு சில இடங்களில் திமுகவினரே போட்டி போடுகின்றனர். ரேஷன் கடைகளில் அதிகாரிகளோடு போட்டி போட்டுக்கொண்டு திமுகவினர் அரசின் பரிசு பொருட்களை மக்களுக்கு வழங்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

முன்னாள் திமுக அமைச்சர் தா.மோ. அன்பரசு, மவுலிவாக்கத்தில் இருக்கும் ஒரு பொது விநியோக ரேஷன் கடை ஒன்றில் சிரித்து கொண்டே, பொது மக்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தை வழங்கிய காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அதிகாரிகளோடு போட்டிபோடும் திமுக தலைவர்கள் !

ஆளும் கட்சி காரர்கள் யாரும் பரிசு பொருட்களை வழங்க கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில், முன்னாள் திமுக அமைச்சரே இப்படி ஒரு காரியத்தில் ஈடுபட்டுள்ளது திமுகவினருக்கு முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மற்றும் சேலையூர் பகுதிகளில் திமுக சார்பாக அங்கும் இங்கும் திமுக பரிசு பொருட்களை வழங்குவது போல கட் அவுட்களும் வைக்கப்பட்டுள்ளன.

ஆளும்கட்சி டோக்கன் வழங்கக்கூடாது என ஆர்ப்பாட்டம் செய்த மு.க.ஸ்டாலின், இப்போது சொந்த கட்சிக்காரர்களே பரிசுத் தொகுப்பை வழங்க முண்டியடிப்பதற்கு என்ன சொல்லப்போகிறாரோ?