திமுக தோல்விக்கு காரணமாக அமையுமா வாரிசு அரசியல் ?

 

திமுக தோல்விக்கு காரணமாக அமையுமா வாரிசு அரசியல் ?

’’திமுகவில் கருணாநிதி குடும்பத்தினரை தவிர வேறு யாரும் முதன்மை இடத்திற்கு வர முடியாது. அது முழுக்க முழுக்க வாரிசுகள் ஆதிக்கம் செலுத்தும் கட்சி. இந்த வாரிசு அரசியலுக்கு வரும் தேர்தலில் முடிவுகட்ட வேண்டும் “ என தனது பிரச்சார கூட்டத்தில் தவறாமல் பேசி விடுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

இந்த பேச்சு மக்களிடம் எடுபடும் நிலையில், இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், இந்த தேர்தலிலும் திமுகவின் வாரிசு அரசியல் விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்கின்றனர். கடந்த 2 சட்டமன்ற தேர்தலின்போதும், திமுகவுக்கு பெரும்பின்னடைவாக இருந்த விவகாரம் என்றால் அது வாரிசு அரசியல்தான். திமுக தலைவராக கருணாநிதி இருந்தபோது திட்டமிட்டே தனது குடும்ப நபர்களை கட்சிக்குள் கொண்டு வந்தார். தனது மருமகன் முரசொலி மாறன், மகன் ஸ்டாலின் ஆகியோரை கட்சி பொறுப்புக்கு கொண்டு வந்ததன் மூலம், தனது இடத்தை உறுதி செய்து கொண்டவர் கருணாநிதி.

திமுக தோல்விக்கு காரணமாக அமையுமா வாரிசு அரசியல் ?

திமுகவின் தலைவர் குடும்பத்து வாரிசு அரசியல் தமிழக அரசியலுக்கு களங்கமாகவே இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் வாரிசு அரசியல் கொடிகட்டி பறந்தாலும், திமுகவில் இது கொஞ்சம் அதிகம்தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். திமுகவில் கருணாநிதி காலத்தில் கொடிகட்டி பறந்த வாரிசு அரசியலால், ஊழல் பெருகியதுடன், வாரிசு பிரச்சினைகளை சமாளிப்பதற்கே கருணாநிதிக்கு நேரம் சரியாக இருந்தது.

திமுகவில் வாரிசு அரசியல் இன்று நேற்று தொடங்கியதல்ல, 1967 ஆம் ஆண்டிலேயே தொடங்கிவிட்டார் கருணாநிதி. 1967ல் திமுக ஆட்சியைப் பிடித்தபோது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, ஏற்கனவே தான் வகித்து தென்சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது, அந்த இடத்தை பிடிக்க பல மூத்த தலைவர்களுக்கு விருப்பம் இருந்தது. ஆனால், பல தந்திரங்கள் மூலம் அந்த இடத்துக்கு தனது மருமகன் முரசொலி மாறனை கொண்டு வந்தார். அதன் மூலம், கட்சிக்குள் தனக்கு செல்வாக்கான இரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

திமுக தோல்விக்கு காரணமாக அமையுமா வாரிசு அரசியல் ?

அண்ணா மறைந்ததும், கட்சிக்கு யார் தலைவர் என்கிற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர் ஆதரவுடன், தனது வாரிசி முரசொலி மாறன் மூலம் மூத்த தலைவரைகளை ஓரம் கட்டி, கட்சியை கைப்பற்றியவர் கருணாநிதி. அதன் பின்னர் எம்.ஜி.ஆருக்கு எதிராக அரசியல் செய்ய தனது மகன் மு.க முத்துவை திரையுலகில் களமிறக்கினார். நடிப்புத் திறமையற்ற மு.க.முத்து, எம்ஜிஆர் என்கிற மாபெரும் நட்சத்திரத்திற்கு முன்னால் காணாமல் போனார். இப்படி வாரிசு மூலம் மேலே வரவும், எதிர் அரசியல் செய்பவர்களை காலி செய்யவும் விரும்பியர் கருணாநிதி.

அதன்பின்னர், எம்.ஜி.ஆர் தனியாக அதிமுகவை தொடங்கியது பத்து ஆண்டுகள் கருணாநிதி வனவாசம் இருந்தார். எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அப்படியும் மீண்டும் வாரிசு அரசியலை கையில் எடுத்தார். 1980 ல் திமுகவில் இளைஞரணி தொடங்கப்பட்டதும், அதன் தலைவராக தனது மகன் மு.க ஸ்டாலினை கொண்டுவந்தார்.

1989 ஆம் ஆண்டில், அப்போது மத்தியில் ஆளும்கட்சியாக இருந்த வி.பி.சிங்குடன் நெருக்கமாக இருந்த கருணாநிதி, மாநிலங்களவை உறுப்பினராக இருந்த, தனது மருமகன் முரசொலி மாறனுக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பொறுப்பை வாங்கி கொடுத்தார் . கருணாநிதியின் மருமகன் என்கிற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு முரசொலி மாறன் 4 முறை மத்திய அமைச்சராக இருந்துள்ளார்.

திமுக தோல்விக்கு காரணமாக அமையுமா வாரிசு அரசியல் ?

அதன்பின்னர் தனது மகன்கள் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி ஆகியோரை திட்டமிட்டு வளர்த்து கொண்டு வந்தார். அதுமட்டுமல்ல தனது துணைவி ராஜாத்தி அம்மாளின் மகளான கனிமொழியையும் வளர்த்து விடத் தொடங்கினார். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கி டெல்லிக்கு அனுப்பி அரசியல் கற்றுக் கொடுத்தார். அதன்பின்னர் மெல்ல மகளிர் அணியில் நுழைத்து, இப்போது கட்சியின் மகளிரணி அமைப்பாளராகவும் ஆகிவிட்டார்.

கருணாநிதியின் மகனான மு.க அழகிரிக்கு 2009ல் மத்திய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது. ஸ்டாலினிக்கு கட்சி பதவி, அழகிரிக்கு அமைச்சர் பதவி என சமரசமாக பதவிகளை அளித்தார். இப்படி நேரடி வாரிசுகளை கட்சியின் உயர்பொறுப்புகளுக்கு கொண்டு வந்து திமுகவை கருணாநிதியின் குடும்ப சொத்தாக்கினார். இவர்கள் தவிர மகள் செல்வி, செல்வம், தமிழரசு என பின்னால் இருந்து கட்சியை இயக்கவும் அதிகாரத்தை அளித்துவிட்டு மறைந்தார்.

கருணாநிதிக்குபின் வாரிசுகள் கோலோச்சும்போது, தற்போது வாரிசிகளின் வாரிசுகள் கட்சியை வழிநடத்துகின்றனர். மாறனின் மறைவுக்குப் பிறகு அவரது மகனான தயாநிதி மாறன், கருணாநிதியின் ஆதரவில் இரண்டுமுறை மத்திய அமைச்சரானார். அழகிரி மகன் துரை தயாநிதி,, கயல்விழி ஆகியோர் திமுக மேடைகளில் அதிகாரமாக வலம் வந்தனர். கருணாநிதிக்கு பின்னர், திமுகவின் தலைவரான ஸ்டாலினும் வாரிசு அரசியல்தான் செய்கிறார். தனக்கு மறைமுகமாக உதவ தனது மருமகன் சபரீசனை நிழல் தலைவராக ஆக்கிவிட்டதாக அந்த கட்சிக்குள்ளேயே புகைச்சல் உள்ளது. அதுபோல, தான் இளைஞரணியில் இருந்ததைபோலவே, தனக்குபின் தனது மகன் உதயநிதியிடம் திடுதிப்பென இளைஞரணியை ஒப்படைத்தார்.

திமுக தோல்விக்கு காரணமாக அமையுமா வாரிசு அரசியல் ?

இப்படி, ஒரு கட்சியை, அந்த கட்சியை நம்பி உணர்வுபூர்வமாக உழைக்கும் தமிழக இளைஞர்களை, கருணாநிதி தனது குடும்பத்துக்காக மட்டும் பயன்படுத்திக் கொண்டார். அவருக்குப் பின் ஸ்டாலின் பயன்படுத்தி வருகிறார். இவையெல்லாம் மனதில் வைத்துதான் மக்கள் திமுகவை வாரிசு அரசியல் கட்சி என்கிறார்கள். இந்த தேர்தலிலும் திமுகவின் தோல்விக்கு வாரிசு அரசியல் ஒரு காரணமாக சொல்லப்படலாம் என்றனர்.