சுட்டுக்கொலை, வெட்டிக்கொலை, எரித்துக் கொலை, ஜலசமாதி.. அதிமுக வெளியிட்ட பகீர் பட்டியல்

சுட்டுக்கொலை, வெட்டிக்கொலை, எரித்துக் கொலை, ஜலசமாதி.. அதிமுக வெளியிட்ட பகீர் பட்டியல்

எங்கள் ஆட்சியிலேயே பட்டினி சாவு என்பதே கிடையாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதற்கு எதிராக அதிமுக சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டிருக்கிறது.

சுட்டுக்கொலை, வெட்டிக்கொலை, எரித்துக் கொலை, ஜலசமாதி.. அதிமுக வெளியிட்ட பகீர் பட்டியல்

‘’இருக்காதா பின்ன நடை பயிற்சிகளை கொலை பயிற்சிகளாக்கும் நாசகார செயல்களும், நட்புக்கும் நஞ்சூட்டி முடிக்கும் நயவஞ்சக மர்ம மரணங்களும், வசதிபடைத்த வாரி சற்றே முதியோர்களை குறிவைத்து நடத்தப்பட்ட சொத்து மதிப்பு கொலைகளும், சைக்கோ கொலைகளும், சரம்சரமாய் படுகொலைகளும் என கொலையுதிர் காலம் என்றால் அது தில்லுமுல்லு கழகத்தின் திகில் ஆட்சிக்காலம் தானே?

இது மட்டுமா.. மின் கட்டண உயர்வில் ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடிய 7 விவசாயிகளை திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் குருவிகளை சுடுவது போல சுட்டு வீழ்த்தி விட்டு, துப்பாக்கியிலிருந்து ரவை வராமல் பூக்களால் வரும் என்று நக்கல் பேசியது திமுக ஆட்சிதான்.

சுட்டுக்கொலை, வெட்டிக்கொலை, எரித்துக் கொலை, ஜலசமாதி.. அதிமுக வெளியிட்ட பகீர் பட்டியல்

அதுபோல சொற்ப கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 17 பேரை தாமிரபரணி நதிக்குள் தள்ளி ஜலசமாதி நடத்திய சண்டாளர்களும் திமுகவினர் தான்.

இதுபோக தன் உதிரம் தேயத்தேய திமுகவுக்கு ஓடி ஓடி உழைத்த தா. கிருஷ்ணனை தான் போட்ட தார் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்ததும், ஆலடி அருணா தொடங்கி அண்ணாநகர் ரமேஷ் குடும்பம் , பெரம்பலூர் சாதிக், மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் லீலாவதி, தினகரன் பத்திரிகை ஊழியர்கள் மூவர் என்று ஏராளமான உயிர்களை பரலோகம் அனுப்பி வைத்த பாவிகளின் ஆட்சியும் திமுக ஆட்சிதான் .

சுட்டுக்கொலை, வெட்டிக்கொலை, எரித்துக் கொலை, ஜலசமாதி.. அதிமுக வெளியிட்ட பகீர் பட்டியல்

அதுமட்டுமல்ல கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் பசியும் பஞ்சமும் தலை விரித்து ஆட, கருணாநிதி ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா என்று ஊரெங்கும் மரண ஓலங்கள் ஒலித்தன என்பதையும் காலம் மறக்காது. அதனால் ஏதோ தேனாறும் பாலாறும் ஓட திமுக ஆட்சி நடத்தியது போல கொலைக்கார கும்பல் பித்தலாட்டம் செய்யலாமா?’’என்று கேள்வி எழுப்பி இருக்கிறது நமது அம்மா நாளிதழ்.