தனியாக பேச வேண்டும் என்று என்னை அழைத்தார் கலைஞர்… அழகிரி உருக்கம்

 

தனியாக பேச வேண்டும் என்று என்னை அழைத்தார் கலைஞர்… அழகிரி உருக்கம்

மதுரையில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி, தனது தம்பி ஸ்டாலின் குறித்து உருக்கமாக பேசினார்.

’’திருமங்கலம் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின், ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொன்முடி ஆகியோருக்கு என் வீட்டில் மதிய விருந்து. விருந்துக்கு வந்தவர்கள் எல்லோரும் முன்கூட்டியே பேசி வந்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. வந்தவர்கள் எல்லோரும், நீங்கள் தலைவரிடத்தில் பேசி ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வாங்கித்தரவேண்டும் என்று சொன்னார்கள்.

தனியாக பேச வேண்டும் என்று என்னை அழைத்தார் கலைஞர்… அழகிரி உருக்கம்

இது ஒரு பெரிய விசயமா? எனக்குத்தான் பதவி ஆசை கிடையாது. அவருக்குத்தானே கேட்கப்போகிறேன். இது ஒரு விசயமா என்று சொல்லிவிட்டு, உடனே தொலைபேசியை எடுத்து தலைவருக்கு பேசினேன். ’என்னடா..’ன்னு கேட்டாரு. ஒண்ணும் இல்லப்பா..ஸ்டாலினுக்கு நீங்க பொருளாளர் பதவி கொடுக்கணும் என்று சொன்னேன். ’சரிடா’ என்று சொல்லி போனை வைத்துவிட்டார். அன்று மாலையே மாலைமுரசு பேப்பரில் பொருளாளர் ஸ்டாலின் என்று செய்தி வந்தது.

திருமங்கலம் தேர்தலில் வெற்றியை தேடித்தந்ததால் என்னை தென்மண்டல அமைப்பு செயலாளர் ஆக்கியதால், அந்த பொறாமையால்தான் தன்னை பொருளாளர் ஆக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ஸ்டாலின்.

தனியாக பேச வேண்டும் என்று என்னை அழைத்தார் கலைஞர்… அழகிரி உருக்கம்

அதுமட்டுமல்ல; இன்னொரு விசயத்தை சொல்றேன்..ஒரு உண்மையை சொல்றேன்.. பொய் சொல்லி எனக்கு பழக்கமில்லை. பொய் சொல்லவே தெரியாது எனக்கு. திருமங்கலம் தொகுதி தேர்தலின் போது இரவில் தம்பி ஸ்டாலின், அவரது மனைவி, இன்னும் ரெண்டு பேரும் என் வீட்டுக்கு விருந்துக்கு வந்தாங்க. விருந்து என்ன விருந்து…அண்ணன் தம்பிக்குள் என்ன விருந்து…சாப்பிட வந்தாங்க.

அப்போதும் நான் ஸ்டாலினை பார்த்து சொன்னேன். அப்பாவுக்கு பிறகு நீதான் எல்லாம். உனக்காக நான் எப்போதும் பாடுபடுவேன். நீதான் தலைவர்.. நீதான் முதல்வர் என்று சொன்னேன். அண்ணா மீது கலைஞர் மீது ஆணையிட்டு சொல்கிறேன். அவருடையை(ஸ்டாலின்) மனசாட்சிக்கு தெரியும். இந்த வார்த்தையை சொல்லவில்லை என்று அவர் மறுக்க முடியுமா? அடுத்த தலைவர் நீதான்.. அடுத்த முதல்வர் நீதான் .. எனக்கு எந்த பதவியும் தேவையில்ல..இப்படியே சொன்னேன். ஆனா, அவர் ஏன் எனக்கு இப்படி துரோகம் செய்தார்னு எனக்கு தெரியவே இல்லை.

தனியாக பேச வேண்டும் என்று என்னை அழைத்தார் கலைஞர்… அழகிரி உருக்கம்

அமைச்சர் பதவி எனக்கு வேண்டாம் என்று சொன்னேன். கலைஞர்தான் என்னை வலுக்கட்டாயமாக அமைச்சர் ஆக்கினார். பதவியேற்றுவிட்டு டெல்லியில் இருந்து சென்னை வந்ததும், அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தோம். அப்போது, தலைவர் உங்களை மட்டும் தனியாக கூப்பிடுகிறார் என்று வந்து சொன்னார்கள். இவ்வளவு பேர் இருக்கும்போது என்னை மட்டும் ஏன் அப்பா தனியாக கூப்பிடுகிறார் என்று யோசித்துக்கொண்டே போனேன்.

தனியாக பேச வேண்டும் என்று என்னை அழைத்தார் கலைஞர்… அழகிரி உருக்கம்

’வாப்பா..’ என்று அழைத்த கலைஞர், ஒண்ணுமில்ல.. உன் தம்பி துணைமுதல்வர் பதவி கேட்கிறான்னு சொன்னார். அதுக்கென்ன கொடுத்திட்டுப்போங்கன்னு சொன்னேன். இது உங்க கட்சி, நீங்க வளர்த்த கட்சி. எங்களை கேட்கணும்னு அவசியம் இல்லையேன்னு சொன்னேன். நான் எந்த பதவியும் கேட்கவில்லை. நீங்களாக பார்த்துதான் என்னை மந்திரி ஆக்கினீர்கள். தாராளமாக கொடுங்கள் என்று சொன்னேன். ஆனால், என்னை எதுக்கு கட்சியை விட்டு நீக்கினாங்க. நான் என்ன தப்பு செய்தேன்’’என்று உருக்கமாக பேசினார் அழகிரி.