Home அரசியல் திருமங்கலம் ஃபார்மூலா... திரும்ப எடுத்து வந்த அழகிரி!

திருமங்கலம் ஃபார்மூலா… திரும்ப எடுத்து வந்த அழகிரி!

இப்போதெல்லாம் தமிழகத்தில் எந்த தேர்தல் நடந்தாலும் ‘திருமங்கலம் பார்முலா’ என்ற பேச்சு எழுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்த விஷயம்தான் திருமங்கலம் பார்முலா என்று பேசப்படுகிறது.

1952- முதல் 14 சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் ஒரு இடைத்தேர்தல் என 15 தேர்தல்களை சந்தித்து இருக்கிறது திருமங்கலம். இதில், 2009ல் சொன்னபடி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் லதா அதியமான், வெற்றி பெற்றதால், பணப்பட்டுவாடா மூலம் திமுக வெற்றியடைந்ததாகக் கூறப்படும் விவகாரம்தான் திருமங்கலம் ஃபார்முலா என்று சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தை திரும்ப எடுத்து வந்து பேசினார் அழகிரி. மதுரையில் நேற்று ஆதரவாளர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய மு.க.அழகிரி,

’’திருமங்கலம் தேர்தல் என்றால் இந்தியாவே பயப்படுகிறது. திரும்பி பார்க்கிறது. நான் அப்போது தலைமை மீது கோபத்தில் இருந்தேன். நான் திருமங்கலம் தேர்தலில் வேலை செய்ய வேண்டும் என்று கலாநிதிமாறன், தயாநிதிமாறன், இப்போது திமுகவின் தலைவராக இருக்கின்றாரே ஸ்டாலின்.. எல்லோரும் வந்து என்னிடத்திலே மன்றாடி கேட்டுக்கொண்டார்கள். இது தலைவரின் விருப்பம் என்றும் சொன்னார்கள். என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள். அதனால் என்னால் முடியாது என்று சொல்லிவிட்டேன். எப்படியாவது போங்க..என்று சொல்லி ஒப்புக்கொள்ளவில்லை.

’ஒத்துக்கொண்டானா இல்லையா?’ என்று ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ஐ.பெரியசாமிக்கு போன் செய்து தலைவர் விசாரித்துக்கொண்டே இருக்கிறார். திரும்ப திரும்ப எல்லோரும் என்னிடம் மன்றாடி மன்றாடி கேட்டுக்கொண்டதால் நான் ஒப்புக்கொண்டேன். திருமங்கலம் தேர்தலில் வேலை பார்க்க ஒத்துக்கொண்டேன்.

திருமங்கலம் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தேன். வெற்றி பெருவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, 40 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெருவோம் என்று சொன்னேன். அதே 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். ஆனால், திருமங்கலத்தில் நான் பார்முலா பண்ணிட்டதா எல்லோரும் சொன்னார்கள். என்ன பார்முலா பண்ணினேன். ஆயிரம் ரூபா கொடுத்தேன்.. ரெண்டாயிரம் ரூபா கொடுத்தேன் என்று சொன்னார்கள். நான் யாருக்குமே பணம் கொடுக்கவில்லை. எங்களுடைய உழைப்பைத்தான் கொடுத்தோம்.

உழைப்புதான் அந்த வெற்றிக்கு காரணம். அந்த பார்முலா பற்றி தவறாக பேசுபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த பார்முலா என்ன தெரியுமா? 1962ம் ஆண்டில் தஞ்சாவூர் தேர்தலில் தலைவர் போட்டியிடுகின்றார். பரிசுத்த நாடார் என்கிற ஒரு பெரிய பண முதலையை எதிர்த்து போட்டியிடுகிறார். நான் அப்போது சின்னப்பையன். நானும் அங்கே சென்றிருந்தேன். அந்த வயசிலேயே நான் கட்சி வேலை செய்தேன். கலைஞர் ஓட்டுக்களை வாங்க எப்படி எல்லாம் யுக்திகளை கையாள்கிறார் என்பதை தெரிந்துகொண்டேன். ராத்திரி ஒரு மணிக்கு, ரெண்டு மணிக்கு எல்லாம் எழுந்து பூத்துக்கு போவார். அதுதான் வெற்றி பார்முலா. அந்த பணியைத்தான் நான் திருமங்கலத்தில் செய்தேன்.

இப்படி எல்லாம் உழைத்து வெற்றி்யை தேடித்தந்த என்னை சென்னைக்கு அழைத்தார்கள். அப்போது சென்னை விமான நிலையத்தில் என்னை வரவேற்க வெறும் 10 பேர்தான் இருந்தார்கள். அது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

திருமங்கலம் தேர்தலில் ஜெயிக்காமல் போயிருந்தால் காங்கிரஸ் கைவிட்டு போயிருக்கும். திமுக ஆட்சியே அப்போது கையைவிட்டு போயிருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் வெற்றியை தேடித்தந்த எனக்கு 10 பேர்தான் வரவேற்க நிற்கிறார்களே என்று நினைத்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் மனதுக்குள்ளேயே வைத்துக்கொண்டேன். அந்த வெற்றிக்காக நான் வேண்டாம் என்று சொல்லியும் எனக்கு தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி கொடுத்தார் தலைவர். அதனால் நான் மதுரை திரும்பியபோது, என்னை வரவேற்க நிறைய பேர் வந்திருந்தார்கள். முக்கிய பதவி என்பதால் எல்லோரும் என் முன் வந்து நடித்தார்கள்’’ என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி… நெல்லை மாவட்டத்திற்கு துணை ராணுவம் வருகை…

நெல்லை தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, நேற்று நெல்லை மாவட்டத்திற்கு மத்திய துணை பாதுகாப்பு படையினர் வந்தடைந்தனர். தமிழகத்தில் வரும்...

“இனி வன்னியர் வாழ்வில் வசந்த காலமே” ராமதாஸ் எழுதிய கடிதம்!

அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அத்துடன் அதிமுக கூட்டணியில் இடம்பெற பாமகவின் நீண்டகால கோரிக்கையான 10.5% இடஒதுக்கீட்டை அதிமுக அரசு அளித்துள்ளது. இதற்கான...

மியான்மரில் பதற்றம்: இரும்புக்கரம் கொண்டு அடக்கும் ராணுவம் – 18 பேர் பலி!

தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகக் காரணம் காட்டி மியான்மர் ராணுவம் ஆங் சான் சூகி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து சர்வாதிகாரத்தை அரங்கேற்றியது. உடனே ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட்...

ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் சொன்ன ரஜினி!

திமுக என்னும் மாபெரும் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 68ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று, நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தலில்...
TopTamilNews