1956ல் வெறும் ரூ.5 கோடி! 2019ல் ரூ.31.11 லட்சம் கோடி! எல்லாம் நம்ம எல்.ஐ.சி. சொத்து மதிப்புதாங்க….

 

1956ல் வெறும் ரூ.5 கோடி! 2019ல் ரூ.31.11 லட்சம் கோடி! எல்லாம் நம்ம எல்.ஐ.சி. சொத்து மதிப்புதாங்க….

1956ல் வெறும் ரூ.5 கோடி முதலீட்டில் தொடங்கிய எல்.ஐ.சி. நிறுவனத்தின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.31.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது இந்த தகவலை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.

ஆயுள் காப்பீடு இந்திய கழகம் சுருக்கமா சொன்னால் எல்.ஐ.சி. மத்திய அரசுக்கு  சொந்தமான எல்.ஐ.சி. நிறுவனம் மிகப்பெரிய காப்பீட்டு வர்த்தக நிறுவனமாகும். மொத்த இன்ஸ்யூரன்ஸ் வர்த்தகத்தில் எல்.ஐ.சி.யின் பங்களிப்பு தற்போது 73.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

எல்.ஐ.சி.

1956ம் ஆண்டில் வெறும் ரூ.5 கோடி முதலீட்டில் காப்பீட்டு வர்த்தகத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் களம் இறங்கியது. அப்பம் எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு மொத்தமே நாடு முழுவதுமாக 168 அலுவலகங்கள் இருந்தன. ஆனால் இப்போது எல்.ஐ.சி. நிறுவனத்துக்கு 4,851 அலுவலகங்கள், 1 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள், 11.79 லட்சம் முகவர்கள் என பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. 

எல்.ஐ.சி.

எல்.ஐ.சி.யின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.31.11 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்.ஐ.சி. நிறுவனம் காப்பீட்டு வர்த்தகத்தில் மட்டும் ஈடுபடவில்லை பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்து வருகிறது. இதன் வாயிலாகவும் நல்ல வருமானத்தை எல்.ஐ.சி. ஈட்டி வருகிறது.