பாஞ்சாலங்குறிச்சி காலக்கட்டத்தில் பழகிய நாட்கள் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகின்றன… சீமான்

பாஞ்சாலங்குறிச்சி  காலக்கட்டத்தில் பழகிய நாட்கள் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகின்றன… சீமான்

சின்னதம்பி, உத்தமராசா, பாண்டிதுரை, பாஞ்சாலங்குறிச்சி, ஜல்லிக்கட்டு காளை, பிக்பாக்கெட் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த கே.பி. பிலிம்ஸ் பாலு கொரோனா தொற்றினால் சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று(2.1.2021)காலையில் அவர் மரணம் அடைந்தார்.

பாஞ்சாலங்குறிச்சி  காலக்கட்டத்தில் பழகிய நாட்கள் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகின்றன… சீமான்

தயாரிப்பாளர் ஒருவர் கொரோனாவினால் மரணம் அடைந்திருப்பது திரையிலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

திரைப்பட இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளருமான சீமான், ‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படத்தின் மூலம் என்னைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பெருமதிப்பிற்குரிய ஐயா பாலு அவர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். ஐயா பாலு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஞ்சாலங்குறிச்சி  காலக்கட்டத்தில் பழகிய நாட்கள் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகின்றன… சீமான்

மேலும், ஆகச்சிறந்த தமிழ் உணர்வாளர். திரைக்கலையின் மீது ஆர்வமும், ஆழமான ஈடுபாடும் கொண்டு அதனைப் போற்றி வளர்க்கும் மாண்புடையவர். என் மீது பேரன்பு கொண்டிருந்த ஐயா பாலு அவர்களுடன் ‘பாஞ்சாலங்குறிச்சி’ திரைப்படம் உருவான காலக்கட்டத்தில் பழகிய நாட்கள் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகின்றன. அவரது மறைவு திரையுலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பு! ஐயாவுக்கு எனது கண்ணீர் வணக்கம்! என்று உருக்கமுடன் தெரிவித்திருக்கிறார்.