ஓபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி! பதட்டமாகும் ஈபிஎஸ்!

 

ஓபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி! பதட்டமாகும் ஈபிஎஸ்!

பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று அதிமுக தொடர்ந்து சொல்லி வந்தபோதும் அமித்ஷா முதல் குஷ்பு வரை அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று பேசவே இல்லை. முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியையும் பாஜக ஏற்கவில்லை. பாஜக இரண்டு காரணங்களால் எடப்பாடியை ஏற்க மறுக்கிறது. கடந்த நாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 5 சீட்டுகள்தான் ஒதுக்கினார் ஈபிஎஸ்.

ஓபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி! பதட்டமாகும் ஈபிஎஸ்!

இது பாஜக தலைமையை அதிருப்திக்கு உள்ளாக்கினாலும், அத்தேர்தலில் எடப்பாடியால் வெற்றி வராததாலும் அவர் மேல் பெரிதான அபிப்ராயம் இல்லாமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தங்களைத்தான் கேட்டு செய்வார் என்று மோடியும், அமித்ஷாவும் எதிர்பார்த்திருக்கையில், அதை தவிடு பொடியாக்கிவிட்டு, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. இது மேலும் பாஜகவுக்கு எரிச்சலூட்டி இருக்கிறது.

இதனால் எடப்பாடியாரை தவிர்த்து தனி அணி அமைக்கலாம் என்று பாஜக யோசித்திருக்கிறது. இதன்பின்னர்தான் பாஜகவினர் அதிமுகவை விமர்சிக்க ஆரம்பித்தனர்.

ஓபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி! பதட்டமாகும் ஈபிஎஸ்!

ஓபிஎஸ்சை மீண்டும் பிரியச்சொல்லி அதிமுகவையும், சின்னத்தையும் அவர் கையில் ஒப்படைத்துவிடவும் முயற்சிகள் நடக்கிறதாம். ஓபிஎஸ் தலைமையில் அதிமுக வந்துவிட்டால் பாமக, தேமுதிக,தமாகா கட்சிகளை இணைத்து மேலும் திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் இணைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கிவிடுவது என்றும் முடிவெடுத்துள்ளதாம் பாஜக தலைமை.

தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்காத அதிருப்தியில் இருக்கும் ஓபிஎஸ், பாஜகவின் இந்த முடிவுக்கெல்லாம் தலையாட்டிக்கொண்டிருப்பதை தெரிந்துகொண்டு பதட்டமான ஈபிஎஸ், சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் புலம்பி இருக்கிறார்.

ஓபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி! பதட்டமாகும் ஈபிஎஸ்!

இதன் பிறகே, கட்சிக்கு தலைவர்கள் துரோகம் செய்தாலும் தொண்டர்கள் துரோகம் செய்யமாட்டார்கள் என்று கனல் கக்கியுள்ளார் அமைச்சர் சி.வி.சண்முகம் என்கிறார்கள். மேலும், அதிமுகவையும், இரட்டைஇலை சின்னத்தையும் முடக்க சதி நடக்கிறது. இதற்கெல்லாம் நம் கட்சிக்குள் இருப்பவர்களே துணைபோகிறார்கள் என்று வெடித்தார்.

அமைச்சரின் அந்த பேச்சுக்கு பின்னர் அதிமுகவில் யார் அந்த கறுப்பு ஆடு? என்ற கேள்வி எழுந்தது. அந்த கறுப்பு ஆடு ஓபிஎஸ்தான் என்பதை மனதில் வைத்துதான் அமைச்சர் அப்படி பேசியிருக்கிறார் என்கிறார்கள்.

ஓபிஎஸ் தலைமையில் மெகா கூட்டணி! பதட்டமாகும் ஈபிஎஸ்!

இது எல்லாம் தெரிந்துதான், பாமகவும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பது அதிமுகவின் நிலைப்பாடு என்று தெரிவித்திருக்கிறது. மேலும், எந்த கூட்டணி என்பதும், யார் யார் எங்கிருப்பார்கள் என்பதும் பிப்ரவரியில்தான் தெரியவரும் என்று சொல்லி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.