மக்கள் நல கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை.. வைகோ

மக்கள் நல கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை.. வைகோ

மூன்றாவது அணி அமையும் என்று 2021 சட்டமன்ற தேர்தல் கணிக்கப்பட்டு வருகிறது. 2016 சட்டமன்ற தேர்தலிலும் மூன்றாவது அணி உருவானது.

மக்கள் நல கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை.. வைகோ

மதிமுக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமாகா ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நல கூட்டணி உருவானது. வைகோவின் ஒருங்கிணைப்பில் உருவான இக்கூட்டணி மாற்று அரசியலுக்கான முயற்சி என்று பேசப்பட்டது. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தொடக்கத்தில் அச்சுறுத்தலாகவே இருந்தது. அதிமுகவின் பி டீம் என்ற விமர்சனமும் இருந்தது.

மக்கள் நல கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை.. வைகோ

கூட்டணியின் தலைவராகவும், முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார் விஜயகாந்த். வைகோ,திருமாளவனை தலைமை ஏற்பார் என்று நினைத்திக்கையில், விஜயகாந்த் தலைமை ஏற்று பிரச்சாரத்தில் செய்த ரகளைகள் ஏராளம். வைகோவும் அத்தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த கூட்டணி அத்தேர்தலில் படு தோல்வியை தழுவியது.

மக்கள் நல கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை.. வைகோ

இந்நிலையில், 2021 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், ம.ந.கூ. இத்தேர்தலில் அமையுமா? என்ற கேட்டபோது, மக்கள் நல கூட்டணி உருவாக இனி வாய்ப்பே இல்லை என்றார். மேலும், திமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிடவே விருப்பம் என்றும் தெரிவித்தார்.