பி.கே.வுக்கு எதிராக ஓபிஎஸ் – ஈபிஎஸ் போட்ட உத்தரவு!

 

பி.கே.வுக்கு எதிராக ஓபிஎஸ் – ஈபிஎஸ் போட்ட உத்தரவு!

அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற கையெழுத்து பிரச்சாரத்தினை திமுக மேற்கொண்டு வருகிறது. திமுகவிற்கு தேர்தல் வேலைகளை செய்து வரும் ஐபேக் பிரசாந்த் கிஷோரின் குழுவினர்தான் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் திமுகவினர் செய்துவரும் இதுமாதிரியான பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவுடன் இணைந்து ’திமுகவை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம்’ என்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது.

பி.கே.வுக்கு எதிராக ஓபிஎஸ் – ஈபிஎஸ் போட்ட உத்தரவு!

தென்காசி வடக்கு மாவட்டம் மற்றும் மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைந்து திமுகவை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம் என்ற கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

திமுகவை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம் என்ற கையெழுத்து இயக்கம் தமிழகத்தில் முதன்முதலாக தென்காசி வடக்கு மாவட்டம் புளியரையில் நடைபெற்றது. இந்த கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்கிற குட்டியப்பா தொடங்கி வைத்தார். ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பேனரில் கையெழுத்திட்டு தங்களது ஆதரவை அதிமுகவிற்கு அளிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

பி.கே.வுக்கு எதிராக ஓபிஎஸ் – ஈபிஎஸ் போட்ட உத்தரவு!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர் குட்டியப்பா பேசியபோது, தமிழக மக்களால் 10 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட திமுகவை நிரந்தரமாக நிராகரிக்க முடிவு எடுத்து விட்டனர் என்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் கையெழுத்திடுவதை பார்த்தாலே தெரிகிறது. அனைத்து மக்களும் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் இந்த ஆட்சியை தொடர்வதற்காக திமுகவை நிரந்தரமாக நிராகரித்து விட்டோம் என்று சபதம் ஏற்போம் என்றார்.

பி.கே.வுக்கு எதிராக ஓபிஎஸ் – ஈபிஎஸ் போட்ட உத்தரவு!

இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கழக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்து விடக்கூடாது என்று திமுக கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறது. அதற்கு அதிமுக உடைய தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர் என்றார்.

மேலும், சங்கரன்கோவில், கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பேரவை தொகுதிகளில் வீடு வீடாக சென்று 5 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கப்போகிறோம் என்றார்.