தூக்கியடிக்கப்பட்ட ரூபா.. சசிகலா நிம்மதி!

 

தூக்கியடிக்கப்பட்ட ரூபா.. சசிகலா நிம்மதி!

தண்டனைக்காலம் நிறைவடைவதாலும், அபராதத்தொகை கட்டிவிட்டதாலும் இம்மாதம் விடுதலை ஆகவிருக்கிறார் சசிகலா. சசிகலா விடுதலை ஆகும் நாளில் சிறைத்துறையும், மாநில அரசும் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து உளவுத்துறையும் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனாலும், சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆக முடியாது என்று சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார் உள்துறை செயலாளர் ரூபா.

சசிகலா விவகாரத்தில் முக்கியமான அதிகாரி என்பதால் சசிகலாவும் அவரது தரப்பினரும் ரூபா உள்துறை செயலாளர் ஆனதில் இருந்தே பதற்றத்துடன் இருந்தனர். இந்நிலையில், ரூபா வேறு இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டிருப்பதால் சசிகலா நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்.

தூக்கியடிக்கப்பட்ட ரூபா.. சசிகலா நிம்மதி!

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 10 கோடியே 10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதால், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டையை அனுபவித்து வருகிறார் சசிகலா. தண்டனை காலம் முடிவடைந்துள்ளதால் அபராதத்தொகையினை செலுத்தினால் வரும் ஜனவரி மாதம் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு வரும் நிலையில், அபராத தொகையான 10 கோடியே 10 லட்சம் ரூபாயினை செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் அந்த அபராத தொகைக்கான டி.டியினை சசிகலாவின் வழக்கறிஞர் முத்துக்குமார் கோர்ட்டில் வழங்கியிருக்கிறார். இதையடுத்து சசிகலா இம்மாதம் விடுதலை ஆகிறார்.

தூக்கியடிக்கப்பட்ட ரூபா.. சசிகலா நிம்மதி!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் சசிகலாவுக்கு சமையல் அறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி கைமாறியதாக அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த பெண் அதிகாரி ரூபா, பரபரப்பு குற்றச்சாட்டை உயர் அதிகாரி மீது தெரிவித்தார். சசிகலா சுதந்திரமாக வெளியே ஷாப்பிங் சென்றுவிட்டு வந்ததையும் அம்பலப்படுத்தினார் ரூபா. அது தொடர்பாகவும் சிறையில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் விசாரிக்க அப்போது உயர்மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அது தொடர்பான வழக்கும் இப்போதும் நடைபெற்று வருகிறது.

தூக்கியடிக்கப்பட்ட ரூபா.. சசிகலா நிம்மதி!

இந்த பரபரப்பு சம்பவத்திற்கு பின்னர் ந்சிறைத் துறையிலிருந்து போக்குவரத்து பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார் ரூபா. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஐஜியாக பதவி உயர்வு பெற்ற ரூபா, கர்நாடக மாநிலத்தின் முதல் பெண் உள்துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அவர் உள்துறை செயலாளர் ஆனதுமே சசிகலா விடுதலையாவதில் சிக்கல் நீடிக்கும் என்று செய்திகள் வந்தன.

அதுமாதிரியே, சிறையில் சுதந்திரமாக இருந்த புகாருக்காக சசிகலாவின் தண்டனையை நீடிக்க முடியாது. அதே நேரத்தில் நன்னடத்தை விதிகளை காரணம் காட்டி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்றார்.

இந்நிலையில், எங்கே போனாலும் உயரதிகாரிகளிடம் குற்றம் கண்டுபிடிப்பதிலேயே குறியாக இருக்கும் ரூபா, அந்த குற்றங்களை துணிந்து சொல்லும் ரூபாவுக்கு புது சிக்கல் வந்தது. பெங்களூரு பாதுகாப்பு திட்டம் டெண்டர் விவகாரத்தில் பெங்களூரு கூடுதல் கமிஷனர் ஹேமந்த் நிம்பல்கருடனான மோதலில் உள்துறைச் செயலாளரான ரூபா, கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டிருக்கிறார். இதனால், சசிகலாவும் சசிகலா தரப்பினரும் நிம்மது பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.