திமுகவில் துரைமுருகன், கே.என்.நேருவை ஓரம் கட்ட முயற்சியா?

 

திமுகவில் துரைமுருகன், கே.என்.நேருவை ஓரம் கட்ட முயற்சியா?

ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக கழட்டி விடுவதைப் போல திமுகவின் மூத்த தலைவர்கள் கழட்டி விடப்பட்டு வருகிறார்கள். துரைமுருகன், கே. என். நேரு போன்றவர்களை அந்த வகையில் கழற்றிவிட திமுக முயற்சி செய்கிறது. அதாவது அந்த மூத்த தலைவர்களை ஓரங்கட்ட திமுக முயற்சி செய்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். திருவெறும்பூரில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திமுகவில் துரைமுருகன், கே.என்.நேருவை ஓரம் கட்ட முயற்சியா?

அவர் இதுகுறித்து மேலும், ‘’ திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்குது. முதலில் கருணாநிதி, ஸ்டாலின் அடுத்து உதயநிதி என அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பொறுப்புக்கு வர முடியும். இன்றைக்கு முதலமைச்சராக வரவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு அவர்களின் சொந்தங்கள் மட்டுமே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஸ்டாலின் ஒருபுறம், உதயநிதி ஒருபுறம், தயாநிதிமாறன் ஒருபுறம், கனிமொழி ஒருபுறம் இப்படி ஆளுக்கு ஒரு புறம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களைத் தவிர திமுகவில் வேறு தலைவர்கள் இல்லையா?

திமுகவில் துரைமுருகன், கே.என்.நேருவை ஓரம் கட்ட முயற்சியா?

திருச்சியிலே இருக்கின்ற கே. என். நேருவை கழற்றி விட்டு விட்டார்கள். ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக கட்டிவிடுவார்கள் அதுபோல திமுகவின் முன்னணித் தலைவர்கள் ஒவ்வொருவராக இப்படி கழட்டி விடப்படுகிறார்கள். இந்த கட்சிக்காக எவ்வளவு நாள் உழைத்திருப்பார்கள் அவர்கள். துரைமுருகன் , நேரு போன்றவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட கூடாதா? ஏன் அவர்கள் எல்லாம் மக்கள் செல்வாக்கை இழந்து விட்டார்களா? அதனால்தான் உதயநிதி, கனிமொழி போன்ற அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம? இந்த தேர்தலில் உங்கள் வாக்குகள் மூலம் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் ’’ என்று அவர் கேட்டுக்கொண்டார்.