இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கவில்லையே… பிரதமர் மோடி ஏன் வாய்திறக்காமல் இருக்கிறார்…. டி.ஆர்.பாலு

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கவில்லையே… பிரதமர் மோடி ஏன் வாய்திறக்காமல் இருக்கிறார்…. டி.ஆர்.பாலு

இலங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்கிறார் திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர்.பாலு.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கவில்லையே… பிரதமர் மோடி ஏன் வாய்திறக்காமல் இருக்கிறார்…. டி.ஆர்.பாலு

அவர் மேலும், ‘’மாகாணங்களை ஒழிக்கும் திட்டம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13 -ஆவது சட்டத் திருத்தத்திற்கு எதிரானது. அந்த சட்டத்தையே அகற்றிவிடும் ஆணவம் மிக்க அக்கிரமமான நடவடிக்கை இது. இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தம் மதிக்கப்படாமல் கேள்விக்குறியாக்கப் படுகின்ற இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட நமது வெளியுறவுத் துறை அமைச்சரும், சமீபத்தில் இலங்கை சென்று வந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், பிரதமரோ வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது’’என்கிறார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மதிக்கவில்லையே… பிரதமர் மோடி ஏன் வாய்திறக்காமல் இருக்கிறார்…. டி.ஆர்.பாலு

’’தமிழர்களுக்கு அதிகாரம் அளிப்போம், அதுவும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அதிகமான அதிகாரம் அளிப்போம் என்றெல்லாம் பேசி விட்டு, தற்போது தமிழர்களுக்கு என இருக்கின்ற மாகாணங்களையும் ஒழிப்போம் என்பதை இந்திய அரசு ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது’’ என்று கேள்வி எழுப்பும் பாலு,

’’ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுயமரியாதையையும் பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் இந்திய-இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.