1947 ஆம் ஆண்டே முஸ்லீம்களை பாகிஸ்தானிற்கு அனுப்பியிருக்க வேண்டும் – கிரிராஜ் சிங்

1947 ஆம் ஆண்டே முஸ்லீம்களை பாகிஸ்தானிற்கு அனுப்பியிருக்க வேண்டும் – கிரிராஜ் சிங்

நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னர் இஸ்லாமியர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பாததற்கான விலையை இந்தியா தற்போது கொடுத்து வருவதாக மத்திய அமைச்சர் (Giriraj Singh) கிரிராஜ் சிங் பேசியிருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. 

பீகார் மாநிலம் (Purnea) புர்னியா மாவட்டத்தில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பேரணியில் பங்கேற்ற கிரிராஜ் சிங், வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக நமது மூதாதையர்கள் போராடிக் கொண்டிருந்தபோது, இஸ்லாமியர்களுக்கென தனி நாடு வேண்டுமென முகமது அலி ஜின்னா குரல் எழுப்பியதாக சாடினார். அந்த சமயத்தில், நமது மூதாதையர் ஒரு தவறிழைத்துவிட்டதாக அவர் குறிப்பிட்டார். அப்போது இஸ்லாமியர்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்த இந்துக்களை இந்தியாவுக்கு அழைத்து வந்‌திருந்தால், குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற கேள்வியே எழுந்திருக்காது எனவும் அமைச்சர் கிரிராஜ் சிங் கூறினார்.

கிரிராஜ் சிங்

அவரது இந்தக் கருத்துக் குறித்து பாரதிய ஜனதா கூட்டணியில் உள்ள லோக் ஜன்சக்தி (LokJanshakti ) கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் அதிருப்தி தெரிவித்துள்ளார். தனது கட்சியைச் சேர்ந்த யாராவது ஒருவர் இப்படிப் பேசியிருந்தால், தாம் அதற்குப் பொறுப்பேற்று சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் எனக் கூறினார்.