எந்த கூட்டணி? முதல்வர் வேட்பாளர் யார்? என்பது பிப்ரவரியில்தான் தெரியும்.. பாமக தலைவர் ஜி.கே.மணி

 

எந்த கூட்டணி? முதல்வர் வேட்பாளர் யார்? என்பது  பிப்ரவரியில்தான் தெரியும்.. பாமக தலைவர் ஜி.கே.மணி

பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று இணையவழியில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, சேலம் கொல்லம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுகவின் நிலைப்பாட்டிற்கும் கூட்டணிக்கு சம்பந்தமில்லை என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

எந்த கூட்டணி? முதல்வர் வேட்பாளர் யார்? என்பது  பிப்ரவரியில்தான் தெரியும்.. பாமக தலைவர் ஜி.கே.மணி

முதல்வர் வேட்பாளரை அறிவித்து அதிமுக தேர்தல் பிரச்சாரத்தினை தொடங்கியபோது அந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் பங்கேற்கவில்லை. மேலும், அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்திருக்கிறது. ஆனால், தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி கூட்டம்கூடித்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். தமிழக பாஜக தலைவர் முருகனும், துணைத்தலைவர் அண்ணாமலையும் கூட்டணி பற்றியும், முதல்வர் வேட்பாளர் பற்றியும் தலைமைதான் முடிவு செய்யும் என்று சொல்லி வருகிறார்கள்.

எந்த கூட்டணி? முதல்வர் வேட்பாளர் யார்? என்பது  பிப்ரவரியில்தான் தெரியும்.. பாமக தலைவர் ஜி.கே.மணி

கூட்டணியில் இருக்கும் பாஜக எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்காத நிலையில், பாமகவும் ஏற்கவில்லை என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

’’ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும். அதிமுகதான் முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளது. அது அதிமுகவின் பிரச்சாரம். கூட்டணி கட்சிகளுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லாத செயல்பாடுதான் அது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளர் என்பது அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுகவின் நிலைப்பாட்டுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் சம்பந்தமில்லை.’’ என்று தெரிவித்துள்ள ஜி.கே.மணி,

’’தேர்தல் வரும் நேரத்தில் மருத்துவர்(ராமதாஸ்) கூட்டணி குறித்து அறிவிப்பார். தேர்தல் அறிவித்த பின்னர் ஒருங்கிணைப்பு குழுதான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை தெரிவிக்கும். இப்போது யூகத்தின் அடிப்படையில் சொல்ல முடியாது. பிப்ரவரி வாக்கில்தான் யார், யார் எங்கிருப்பார்கள். எப்படிப்பட்ட கூட்டணி என்று தெரியும். இப்போது யூகத்தின் அடிப்படையில் ஆருடம் சொல்ல முடியாது’’ என்று தெரிவித்துள்ளார் உறுதியாக.