எல்.முருகன் வீட்டில் எச். ராஜா சாப்பிடுவாரா? பிஜேபி தலைவர்கள் சாப்பிடுவார்களா? சீமான் ஆவேசம்

எல்.முருகன் வீட்டில் எச். ராஜா சாப்பிடுவாரா? பிஜேபி தலைவர்கள் சாப்பிடுவார்களா? சீமான் ஆவேசம்

இந்தத் தேர்தல் திமுகவா? நாம் தமிழர் கட்சியா? என்கிற போட்டி தேர்தல்தான் இது. இதில் மு. க. ஸ்டாலின் எங்கு போட்டியிடுகிறாரோ அங்கு நான் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். நான் பிரபாகரனின் மகன்; அவர் கருணாநிதியின் மகன். எனக்கு ஒன்றும் பயமில்லை. ஒரே களத்தில் யுத்தம் செய்வோம் ;சண்டை செய்வோம் என்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமானிடம்,

எல்.முருகன் வீட்டில் எச். ராஜா சாப்பிடுவாரா? பிஜேபி தலைவர்கள் சாப்பிடுவார்களா? சீமான் ஆவேசம்

ஏன் அதிமுகவை எதிர்க்க வில்லை. திமுகவை மட்டும் எதிர்க்கிறீர்கள்? என்று கேட்ட கேள்விக்கு, ’’அதிமுக எதிர்க்க வேண்டிய கட்சி அல்ல. அதை ஏன் எதிர்க்க வேண்டும். அதிமுகவை பெத்து போட்டது யாரு திமுக தானே.. அதுதானே திராவிடம் என்கிறது. திராவிடத்தை அழிக்க முடியாது என்கிறது. அதனால் தான் நாங்களும் எதிர்க்க முடிவு செய்து விட்டோம். ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன். அவரை எதிர்ப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’என்றவரிடம்,

எல்.முருகன் வீட்டில் எச். ராஜா சாப்பிடுவாரா? பிஜேபி தலைவர்கள் சாப்பிடுவார்களா? சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சி்யில் இந்துக்களே கிடையாதா என்ன? என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்ப, ‘’நாங்கள் இந்துக்களே கிடையாது. நாங்கள் சைவர்கள் எங்கள் எங்கள் சமயம் சிவ சமயம். நாங்கள் சிவன், முருகன், மாயோனை வழிபடுகின்ற கோட்பாட்டை கொண்டவர்கள். நானா ஹிந்து நான் முருகனை வழிபடுகின்ற சைவத்திலும் வீரசைவம்.’’என்று ஆவேசமாக சொன்னவர், ’’சமயம் தான் சைவம். ஆனால் நாங்கள் எப்போதும் சாப்பாட்டில் அசைவம் தான்’’என்று சொல்லிவிட்டு சிரித்தார்.

எல்.முருகன் வீட்டில் எச். ராஜா சாப்பிடுவாரா? பிஜேபி தலைவர்கள் சாப்பிடுவார்களா? சீமான் ஆவேசம்

திராவிட கட்சிகள்தானே இந்துத்துவாவை எதிர்க்கிறது என்று ஒரு நிருபர் கேட்க, ‘’இந்துத்துவாவை திராவிட கட்சிகள் எதிர்க்கிறது என்று யார் சொன்னது? 100 சதவிகித விழுக்காடு இந்துக்கள் பிஜேபியில், தொண்ணூறு சதவிகித இந்துக்கள் என் கட்சியில் என்று சொன்ன தலைவர் யார்?’’என்று சொன்ன சீமானிடம்,

கிறிஸ்துவ கைக்கூலிகள் என்ற விமர்சனம் உங்கள் மீது முன் வைக்கப்படுகிறதே? என்ற கேள்விக்கு,

’’கிறிஸ்துவ கைக்கூலிகள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ்., பிஜேபிதான். அவன் உருவாக்கின நாடு, அவன் போட்ட மதம். இதை புடுச்சு தொங்கிக்கொண்டிருப்பது நாங்களா? நீங்களா?’’என்று கேள்வி எழுப்பியவர், ‘’நாங்கள் அதிகாரத்திற்கு வந்துவிட்டால் எங்களை தனி மதமாக அறிவிப்போம். தமிழர்கள் இந்துக்களா நாங்கள் இந்துக்களே கிடையாது. உன் மதத்திற்குள் வந்து ஏன் சாமி கும்பிட வேண்டும்.

எல்.முருகன் வீட்டில் எச். ராஜா சாப்பிடுவாரா? பிஜேபி தலைவர்கள் சாப்பிடுவார்களா? சீமான் ஆவேசம்

எல்லா கடவுள்களையும் நீ இங்கே இருந்து எடுத்துக்கொண்டாய். அதை எடுத்துக்கொண்டு சும்மா இந்து, இந்து என்கிறார்கள். சரி, இந்து என்கிறார்களே, எல். முருகன் இந்துதானே? எச். ராஜா அவர் வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவாரா? முருகன் வீட்டில் பிஜேபி தலைவர் உட்கார்ந்து சாப்பிடுவாரா.

வேல் தூக்கிக்கொண்டு முருகன் கோவிலுக்கு போகிறார். அங்கே அவரை சன்னதிக்குள் உள்ளே விடுவார்களா? நாட்டின் முதல் குடிமகனையே கோவிலுக்குள் ஒரு ஓரமாக உட்கார வைத்திருக்கிறார்கள். இந்த கேவலத்தை துடைக்க முடியல. இதுல பேச்சு பேசிக்கிட்டு…’’என்று ஆவேசப்பட்டார்.