ரஜினி குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.. சீமான்

 

ரஜினி குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.. சீமான்

கட்சி தொடங்கப்போவதில்லை என்று ரஜினி எடுத்திருக்கும் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,

’’மதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்தின் முடிவை நான் வரவேற்கிறேன். அதை எனது சுற்றுச் செய்தியில் கூட பதிவு செய்திருந்தேன். அவரும் அவருடைய குடும்பத்தாரும் கருதுவது போல அவருடைய உடல்நலம், தன்னுடைய நிம்மதி மன அமைதி முதன்மையானது என்று நம்பியே அதை விரும்பியே நானும் பலமுறை எனது கருத்துக்களை பதிவு செய்திருந்தேன்.

ரஜினி குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.. சீமான்

கடந்த காலங்களில் அவர் மேல் பெரும் மதிப்பு வைத்திருந்த ரசிகன் நான். அரசியல் ரீதியாக வரும்போது நான் கடுமையான விமர்சனங்களை, கடும் சொற்களை அவர் மீது பயன்படுத்தியிருக்கலாம்; பேசி இருக்கலாம். அது அவரையோ, அவரது குடும்பத்தினரையோ அவரது ரசிகர்களையோ காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி எப்போதும் எங்களுடைய பெரும் புகழ்ச்சிக்கு உரியவர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள் ஒரு ஆகப்பெரும் திரை ஆளுமை. அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆசியக் கண்டம் முழுமைக்கும் அவர் புகழ் பரவிக் கிடக்கின்றது. தமிழ் மக்கள் பெரிதும் அவரை கொண்டாடுகிறார்கள். நாம் தமிழர் பிள்ளைகளும் இனி அவரை கொண்டாடுவோம். அரசியல் அவருக்கு அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். அதையே அவரும் எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன்; பாராட்டுகிறேன்.’’என்று தெரிவித்தவரிடம்,

ரஜினி குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.. சீமான்

ரஜினி ரசிகர்கள் தங்கள் மீது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்களே? என்ற கேள்விக்கு, ‘’அவர்கள் என்ன வெளிநாட்டில் இருந்து வந்தவர்களா. எல்லாம் என் மண்ணைச் சேர்ந்தவர்கள். என் தம்பிகள். ரஜினி ரசிகர்கள் நிறைய பேர் என் கட்சியில் இருக்கிறார்கள். என்னிடம் வந்து தலைவரை ரொம்ப தீட்டாதீங்க என்று சொல்லுவார்கள். சரி,சரி போங்கடா என்று சொல்லிவிடுவேன். அவர்கள் புரிந்துகொள்வார்கள்’’ என்றார்.