டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது.. மகளிர் ஆயத் தலைவர் ம. லெட்சுமி வலியுறுத்தல்!

 

டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது..  மகளிர் ஆயத் தலைவர் ம. லெட்சுமி வலியுறுத்தல்!

டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து தமிழ் மக்களை சீரழித்துக் கொண்டுள்ள தமிழ்நாடு அரசு, இப்பொழுது தேநீர் கடைகளைப் போல டாஸ்மாக் பார்களையும் திறக்கப் போவதாக அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்கிறார் மகளிர் ஆயத் தலைவர் ம. லெட்சுமி.

டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது..  மகளிர் ஆயத் தலைவர் ம. லெட்சுமி வலியுறுத்தல்!

அவர் மேலும், மதுப்பழக்கத்தால் தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்கள் ஆளுமையை இழந்து, உடலுழைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். குடும்பங்கள் நிம்மதியின்றி தவிக்கின்றன. சாலை விபத்துகள் ஏற்படுவதற்கு முதன்மையான காரணம் மதுக்கடை திறந்திருப்பதுதான் என்பது புள்ளிவிவரங்கள் வழியாக மெய்ப்பிக்கப்பட்ட உண்மை என்கிறார்.

கொரோனா பொது முடக்கம் காரணமாக, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துத் தவித்து வரும் சூழலில், இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைத் திரும்பி வருகிறது. இப்போது கிடைக்கும் அந்தக் குறைந்தபட்ச வருவாயைக் கூட, டாஸ்மாக் மதுக்கடைகள் பிடுங்கிக் கொள்ளுகின்ற கொடுஞ்சூழல் ஏற்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது..  மகளிர் ஆயத் தலைவர் ம. லெட்சுமி வலியுறுத்தல்!


கையில் மது பாட்டில்களை எடுத்துக் கொண்டு வெளியில் செல்ல, கூச்சப்படுகிற சிலராவது குடிக்காமல் இருந்ததை பார் திறப்பது குடிக்க ஊக்குவிப்பதாக இருக்கிறது என்றும்,

தமிழ்நாடு அரசு தனது வருவாயைப் பெருக்க இந்திய அரசு அள்ளிச் செல்லும் நிதியில் உரிய பங்கை வலியுறுத்திப் பெறுவது, தமிழ்நாடு அரசே பால் வணிகத்தை முழுமையாக ஏற்று நடத்துவது போன்ற மாற்று வழிகளை சிந்திக்க வேண்டுமே தவிர, மது வருமானத்தைச் சார்ந்திருப்பது மக்கள் பகை வழிமுறையாகும்! இப்போது, பார் திறப்பதென்பது இன்னும் இத்திசையில் கூடுதலாக செல்வதாகும் என்றூம் சொல்கிறார்.

டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது..  மகளிர் ஆயத் தலைவர் ம. லெட்சுமி வலியுறுத்தல்!

ஆகவே, எந்த வகையிலும் இந்தப் போக்கு ஞாயமற்றது. இதனை உணர்ந்து, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பார்களைத் திறக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்றும், டாஸ்மாக் மதுக் கடைகளையும், மது உற்பத்தி ஆலைகளையும் மூடுவதற்குக் கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.