நன்றி சொன்ன ரஜினி… மனம் திறந்த அர்ஜூன மூர்த்தி

 

நன்றி சொன்ன ரஜினி… மனம் திறந்த அர்ஜூன மூர்த்தி

ரஜினியின் முடிவு குறித்து மனம் திறந்து தனது எண்ணத்தினை பதிவு செய்திருக்கிறார் அர்ஜூன மூர்த்தி.

நன்றி சொன்ன ரஜினி… மனம் திறந்த அர்ஜூன மூர்த்தி

தொழிலதிபர் அர்ஜூனமூர்த்தி, தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்து வந்தார். இவர் ரஜினிகாந்த் நடித்த ராணுவ வீரன் படத்திலிருந்தே அவருக்கு ரசிகராக இருந்து வருகிறார். அந்த வகையில் ரஜினியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அர்ஜூன மூர்த்தியை, தான் தொடங்கவிருக்கும் கட்சிக்கு தலைமை மேற்பார்வையாளராக நியமித்தார் ரஜினி.

ராணுவவீரனில் துவங்கிய என் பயணத்திலிருந்து உங்கள் வெள்ளித்திரை ரசிகராகவும், இப்போது மாற்று தமிழகத்திற்கான உங்கள் லட்சியத்திற்கு ஒரு சிறிய கருவியாகவும் இருப்பேன் என்று தெரிவித்திருந்தார்.

நன்றி சொன்ன ரஜினி… மனம் திறந்த அர்ஜூன மூர்த்தி

வரும் 31ம் தேதி ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் தேதி குறித்து அறிவிக்க இருந்த நிலையில், அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார் அர்ஜுன மூர்த்தி.

ஆனால், திடீரென்று இன்று, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும், என்னை மன்னியுங்கள் என்று தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்பதை அறிக்கை மூலமாக அறிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

நன்றி சொன்ன ரஜினி… மனம் திறந்த அர்ஜூன மூர்த்தி

அந்த அறிக்கையில், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜுன மூர்த்தி அவர்களுக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து, அர்ஜூனமூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில், தற்போதைய சூழலில் ரஜினி சாரின் மனநிலையினையும் , உடல்நிலையினையும் நான் நன்கறிவேன். ஆகவே, அவரின் முடிவுக்கு முழு மனதுடன் என் ஆதரவினை தெரிவித்துக்கொள்கிறேன் என்கிறார்.